அரசு டவுன் பஸ்கள் நிறுத்தம் பஸ்சை சிறை பிடித்த மக்கள்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மழவராயனேந்தலுக்கு முதன் முதலாக 1990ல் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் இயக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆறு முறை கிராமத்திற்கு வந்து சென்ற டவுன் பஸ்கள் ஊழியர்கள் பற்றாக்குறை

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழவராயனேந்தலுக்கு முதன் முதலாக 1990ல் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் இயக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆறு முறை கிராமத்திற்கு வந்து சென்ற டவுன் பஸ்கள் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே இயக்கப்பட்டது. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை ஊருக்கு வந்த டவுன் பஸ்சை 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாச்சேத்தி போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்து ஒரு மணி நேரத்திற்கு பின் பஸ்சை விடுவித்தனர்.

கிராமமக்கள் கூறுகையில் : இந்த பஸ்களை நம்பி திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சென்று வருகிறோம். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் திருப்பாச்சேத்தியில் இருந்து 3 கி.மீ., தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. எனவே பழைய முறைப்படி பஸ்களை இயக்க வேண்டும், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X