ரேஷன் கடை கோரி முற்றுகை| Dinamalar

ரேஷன் கடை கோரி முற்றுகை

Added : ஜூலை 01, 2022 | |
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு ரேஷன் கடை இல்லாததால் 4 கி.மீ., தூரமுள்ள அணைக்கரைப்பட்டிக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். பாரதி நகர் கிராமத்தில் உள்ள 165 குடும்ப அட்டைகளையும் அரசிடம் திருப்பி அளிக்கப் போவதாக கூறி அப்பகுதி மக்கள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு ரேஷன் கடை இல்லாததால் 4 கி.மீ., தூரமுள்ள அணைக்கரைப்பட்டிக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். பாரதி நகர் கிராமத்தில் உள்ள 165 குடும்ப அட்டைகளையும் அரசிடம் திருப்பி அளிக்கப் போவதாக கூறி அப்பகுதி மக்கள் குடும்ப அட்டையுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.வட்டவழங்கல் அலுவலர் நேரு, சிங்கம்புணரி தாசில்தார் கயல்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பாரதிநகரில் தற்காலிக ரேஷன் கடை அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரும்பி சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X