10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இன்று சென்னையில் சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,
10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இன்று சென்னையில் சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, காவேரிப்பாக்கத்தில், 6 செ.மீ., மழை பெய்தது.வால்பாறை, 4; திருவாலங்காடு, திருவள்ளூர், மாமல்லபுரம், 3; திருத்தணி, அரக்கோணம், ஆவடி, வாலாஜா, தாம்பரம், அவலாஞ்சி, 2 செ.மீ., மழை பதிவானது.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, நாகையில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

சென்னையில் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கோவை, 31; திருச்சி மற்றும் துாத்துக்குடியில், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X