நிர்வாண படம் மிரட்டல்: கடன் பெற்றவர் கண்ணீர்| Dinamalar

நிர்வாண படம் மிரட்டல்: கடன் பெற்றவர் கண்ணீர்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
திருப்பூர்: 'போட்டோ'வை மார்பிங் செய்து மிரட்டுவதாக, செயலியில் கடன் பெற்றவர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.திருப்பூர் சென்னிமலைப்பாளையம், அம்பிகை நகரை சேர்ந்த கனகராஜ், 38. திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் அவர் நேற்று அளித்த மனு: திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கடந்த 21ம் தேதி, கடன் கொடுக்கும் செயலியை போனில் பதிவிறக்கம் செய்து,
நிர்வாண படம் மிரட்டல்: கடன் பெற்றவர் கண்ணீர்

திருப்பூர்: 'போட்டோ'வை மார்பிங் செய்து மிரட்டுவதாக, செயலியில் கடன் பெற்றவர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் சென்னிமலைப்பாளையம், அம்பிகை நகரை சேர்ந்த கனகராஜ், 38. திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் அவர் நேற்று அளித்த மனு: திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கடந்த 21ம் தேதி, கடன் கொடுக்கும் செயலியை போனில் பதிவிறக்கம் செய்து, கடன் கேட்டு விண்ணப்பித்தேன். கடன் கேட்டு, ஆதார், பான் கார்டு, போட்டோ உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்தேன். பின், 7,000 ரூபாய் கடனாக பெற்றேன்.

வட்டியுடன் அதிக பணம் கேட்டனர். கொடுக்க முடியாது என்றதால், 'மார்பிங்' செய்த நிர்வாண போட்டோவை அனுப்பினர். இதனால் பணத்தை அனுப்பி விட்டேன். மீண்டும் 'மார்பிங்' செய்த போட்டோவை, அனைவருக்கும் அனுப்புவோம் என்று மிரட்டி, பணம் கேட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X