பைக்குடன் சிமென்ட் சாலை: கான்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வேலுார் : வேலுாரில், பைக்குடன் சிமென்ட் சாலை போட்ட கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மேயர் சுஜாதா உத்தரவிட்டார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வேலுாரில் நடந்த பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார்.முதல்வரின் வருகையையொட்டி முன்னறிவிப்பு இல்லாமல், வேலுாரின் பல இடங்களில் சாலை போட்டுள்ளனர்.அதில், மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோவில் தெருவில், சிவா
பைக்குடன் சிமென்ட் சாலை: கான்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து

வேலுார் : வேலுாரில், பைக்குடன் சிமென்ட் சாலை போட்ட கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மேயர் சுஜாதா உத்தரவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வேலுாரில் நடந்த பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார்.முதல்வரின் வருகையையொட்டி முன்னறிவிப்பு இல்லாமல், வேலுாரின் பல இடங்களில் சாலை போட்டுள்ளனர்.அதில், மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோவில் தெருவில், சிவா என்பவர் கடை முன் நிறுத்தியிருந்த பைக்குடன் சேர்ந்து சிமென்ட் சாலை போடப்பட்டது.

இதனால், பைக்கை எடுக்க முடியவில்லை; இரண்டு மணி நேரம் போராடி, பைக்கை சிவா எடுத்துள்ளார். இது குறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. சென்னையிலிருந்து வந்திருந்த உயரதிகாரிகள், கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.இதையடுத்து, பைக்குடன் சேர்த்து சாலை போட்ட கான்ட்ராக்டர் குமார் என்பவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேலுார் மேயர் சுஜாதா நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
04-ஜூலை-202214:40:04 IST Report Abuse
David DS இதை விட பெரிய மூணு காண்டிராக்ட் அவருக்கு ஒதுக்கபட போகுதாம். அந்த பைக் அந்த கான்டிராக்டரோட சொந்தக்காரன் தானாம்,. ஆனா வேற கட்சி, இவருக்கு எதிரா வேலை பாக்குற ஆள் வேற. இதெல்லாம் சும்மா ஒரு நாடகம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202215:14:46 IST Report Abuse
D.Ambujavalli அந்த பைக் சொந்தக்காரர் தானாக பாடுபட்டு பைக்கை 'மீட்ட' பொழுது ரோடை சேதப்படுத்தியதற்காக அவரை மாட்டிவிடாமல் இருந்தார்களே ' அப்ப 'வாங்கினதை' அடுத்த ஒப்பந்தத்தில் அட்ஜஸ்ட் செய்வீர்களா ?' ஒப்பந்தக்காரரின் கேள்வி
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
01-ஜூலை-202211:12:34 IST Report Abuse
 Ganapathy Subramanian முதல்வர் வருகிறார் என்று கான்ட்ராக்டருக்கு பிரஷர் கொடுத்து இருப்பார்கள். வேலையை முடிக்க வேண்டும் என்று அவருடைய வடநாட்டு வேலைக்காரர்கள் செய்து விட்டார்கள். கட்சியினரின் குற்றத்தை மறைக்க காண்ட்ராக்டர் மாட்டிக்கொண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X