ஆபாச இணையதளத்தில் விஷமம்: அபார்ட்மென்ட்வாசிகள் அலறல்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை: ஆபாச இணையதளத்தில் பரவிய விஷம தகவலால், அதிர்ச்சியடைந்த கோவை அபார்ட்மென்ட்வாசிகள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.ஆபாச இணையதளம் ஒன்றில், 'இந்த இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசையா' என்று கேட்டு, பெண்களின் படத்தை வெளியிட்டிருந்தனர்.அதை உண்மை என்று நம்பிய சபலப் பேர்வழிகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் வழியாக பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தியவர்களை,
ஆபாச இணையதளம், அபார்ட்மென்ட், கோவை

கோவை: ஆபாச இணையதளத்தில் பரவிய விஷம தகவலால், அதிர்ச்சியடைந்த கோவை அபார்ட்மென்ட்வாசிகள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆபாச இணையதளம் ஒன்றில், 'இந்த இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசையா' என்று கேட்டு, பெண்களின் படத்தை வெளியிட்டிருந்தனர்.அதை உண்மை என்று நம்பிய சபலப் பேர்வழிகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் வழியாக பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தியவர்களை, கோவையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட அபார்ட்மென்ட்டுக்கு செல்லும்படியும், அங்கு விபசார பெண்கள் தயாராக உள்ளனர் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, குறிப்பிட்ட அந்த அபார்ட்மென்ட்டை தேடி ஆண்கள் வரத் தொடங்கினர். ஆனால், உண்மையில் அந்த அபார்ட்மென்டில் நல்ல குடும்ப பெண்கள் இருந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வந்த சபலப் பேர்வழிகளை, வாட்ச்மேன்கள் விரட்டி அனுப்பி வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஆறு மாதங்களாக நடப்பதாக கூறும் அபார்ட்மென்ட்வாசிகள், இந்த விஷமத்தை செய்தவர்கள் யார் என கண்டுபிடிக்க வலியுறுத்தியுள்ளனர். பீளமேடு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். குற்றவாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202215:21:02 IST Report Abuse
D.Ambujavalli இணையம் கிடைத்துவிட்டதென்றால் என்ன அட்டகாசம் வேண்டுமானாலும் செய்யலாம் எண்ணுமளவுக்கு சைபர் குற்றங்கள் மலிந்துள்ளன. போலீசார் பாவம் மேலதிகாரிகள் வீட்டுக்கு காய்கறி வாங்கி, பாத்திரம் தேய்த்து என்று ஆயிரம் வேலைகளுக்கிடையில் இதையெல்லாமா பார்ப்பார்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-ஜூலை-202213:34:16 IST Report Abuse
Vena Suna மரண தண்டனைகள் கொடுக்க வேண்டும் இதற்கும். பயம் வரணும்.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
01-ஜூலை-202207:16:05 IST Report Abuse
ravi காவல்துறை இந்தமாதிரி பிரச்சனைகளை எளிதாக விசாரிக்கலாம். கோவையில் அட்டகாசத்தை குறையுங்கள். கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் நடமாடுவதாக செய்திகள் வருகின்றன. கோவை முதல் கன்னியாகுமரி வரை ஒரே போதை பொருட்கள் நடமாட்டம்தான்-எல்லாமே கேரளா மூலமாக தமிழகத்துக்கு வருவதாக செய்திகள் வருகின்றன. காவல்துறை எல்லைப்பகுதியில் கவனமாக இருந்தால் இதை தடுக்கமுடியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X