சுடு மண் கிண்ணம் கீழடியில் கண்டெடுப்பு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் கீழ்புறம் புனல் போன்ற அமைப்பை கொண்ட இருவண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடி, அகரம், கொந்தகையில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படுகிறது.கீழடியில் எட்டு, அகரம், கொந்தகையில் தலா நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. கீழடியில் புதிதாக
சுடு மண் கிண்ணம் கீழடியில் கண்டெடுப்பு

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் கீழ்புறம் புனல் போன்ற அமைப்பை கொண்ட இருவண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி, அகரம், கொந்தகையில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படுகிறது.கீழடியில் எட்டு, அகரம், கொந்தகையில் தலா நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் கீழ்புறம் கூர்மையாக புனல் போன்ற அமைப்பை கொண்ட இருவண்ண சுடுமண் கிண்ணங்கள் கிடைத்துள்ளன.

மேற்புறம் கருப்பும், கீழ்புறம் சிவப்பு வண்ணமும் கொண்ட இந்த கிண்ணம், 1 லிட்டர் கொள்ளவு கொண்டதாக உள்ளது.ஏற்கனவே கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வில் சாயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட செந்நிற கிண்ணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இருவண்ண கிண்ணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.கீழடி அகழாய்வில் கடந்த ஐந்து மாதங்களில் நீள்வடிவ தாயகட்டை, பானைகள் உள்ளிட்ட 500 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X