முதலிரவில் 'டார்ச்சர்': வக்கிர கணவன் கைது; இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்மின் கம்பி அறுந்து 5 பேர் பலிதிருப்பதி--ஆந்திராவில் சாலையில் சென்ற ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகினர்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சத்யசாயி மாவட்டத்தில் உள்ள சின்னகொண்டய்யபள்ளி கிராமத்தில்,இந்திய நிகழ்வுகள்

மின் கம்பி அறுந்து 5 பேர் பலிlatest tamil news


திருப்பதி--ஆந்திராவில் சாலையில் சென்ற ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகினர்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சத்யசாயி மாவட்டத்தில் உள்ள சின்னகொண்டய்யபள்ளி கிராமத்தில், நேற்று காலை விவசாய கூலி பெண்களுடன் சென்ற ஆட்டோ மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்ந்து ஆட்டோ தீ பற்றியதில், அதில் பயணித்த பெண்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூவர் பலத்த காயமடைந்தனர்.இச்சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாயும், காயம்அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மின்துறை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் கைதுஹைதராபாத்-பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உ.பி., முதல்வர் தலையை துண்டித்து விடுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானாவின் ஹைதராபாதில் வசிக்கும் அப்துல் மஜீத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'முஸ்லிம் மதம் குறித்து நுாபுர் சர்மா வெளியிட்ட அவதுாறு கருத்துக்காக பா.ஜ., தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தலைகளை துண்டித்து விடுவேன்' என கூறிஇருந்தார்.இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் மஜீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், நீதிபதி உத்தரவுப்படி, 'போலீஸ் அதிகாரி அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.குழந்தைக்கு முத்தம்: எதிர்த்த மனைவி கொலைதிருவனந்தபுரம்-கேரளாவில், குழந்தைக்கு முத்தம் கொடுத்ததை கண்டித்த மனைவியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். கர்நாடக தலைநகர் பெங்களூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி தீபிகா, இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் பாலக்காட்டில் வசிக்கிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவினாஷ், சம்பவத்தன்று காலையில் துாங்கி எழுந்ததும், மகனுக்கு முத்தம் கொடுத்தார். பல் கூட துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாது என, தீபிகா கணவனை கண்டித்தார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அவினாஷ்,தீபிகாவை கத்தியால் குத்தினார்.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபிகா, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து, பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவினாசை கைதுசெய்தனர்.


latest tamil news
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் பலிஇம்பால்-மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' கட்டும் பணி நடக்கிறது. இங்கு, நேற்று பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு, பலர் வேலை பார்த்து வந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில், 50க்கும் மேற்பட்டோர்சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு, மாநில கவர்னர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துஉள்ளார்.


தமிழக நிகழ்வுகள்


முதலிரவில் 'டார்ச்சர்': வக்கிர கணவன் கைதுlatest tamil news


நாகப்பட்டினம்: நாகை அருகே முதலிரவில், மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாப்பிள்ளையை, போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினி, 26. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; கொத்தனார்.இரு வீட்டார் சம்மதத்துடன், ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஹிந்து முறைப்படி கடந்த, 27ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவின் போது, ராஜ்குமார், புதுப்பெண் நளினியிடம் அத்துமீறி நடந்ததில், உடல் முழுதும் காயங்களுடன், நளினி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
நளினியின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரின் படி, நாகை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ராஜ்குமாரை தேடி வந்தனர்.நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.சாலை விபத்தில் மூதாட்டி பலிவிருத்தாசலம்-விருத்தாசலம் - வேப்பூர் சாலை, கோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே, கடந்த 15ம் தேதி, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25ம் தேதி இறந்தார். கடலுார் அரசு மருத்துவமனை சவகிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் நீலநிறபுடவை அணிந்திருந்தார். அவர், யார் என, தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


குட்கா விற்றவர் கைதுவிழுப்புரம்-குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் போலீசார், குருசாமி பிள்ளை தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கடை வைத்துள்ள ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த திரிசங்கு மகன் திவாகர், 29; தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரியவந்தது.இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து திவாகரை கைது செய்து, 141 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அடையாளம் தெரியாத முதியவர் பலிவிழுப்புரம்-அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் கண்டமானடி தனியார் கல்லுாரி அருகே 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 24ம் தேதி மயங்கிக் கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. பொதுமக்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று இறந்தார்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தந்தை கொலை வழக்கு: மகன் உட்பட 5 பேர் கைதுமானாமதுரை : மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் சொத்து தகராறு காரணமாக தந்தையை மகனே வெட்டி கொலை செய்ததாக 8 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்தனர்.

வெள்ளிக்குறிச்சியை டீக்கடை உரிமையாளர் பழனியாண்டி 65. இவரது மகன் அய்யங்காளை 45. தந்தை , மகன் இடையே சொத்து பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த தந்தையை அரிவாளால் வெட்டி மகன் கொலை செய்தார். தந்தையை கொலை செய்த மகன், அய்யங்காளை மனைவி தங்கமணி 37, மகன்கள் 2 பேர், பாலதண்டாயுதம் 48 ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


latest tamil news
மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலைபண்ருட்டி-பண்ருட்டி அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த சீரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைசெல்வன்,29. குடிபழக்கம் உள்ளவர். இவர் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்ததை அவரது மனைவி கண்டித்துள்ளார்.விரக்தியடைந்த கலைச்செல்வன் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கந்து வட்டி கேட்டு தொந்தரவு; 3 பெண்கள் கைதுசிவகாசி : கந்து வட்டி கேட்டு பெண்ணை தொந்தரவு செய்த 3 பெண்களை டவுன் போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் மனைவி ஹேமா 36. அட்டை கம்பெனியில் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி முத்துமாரியிடம் 47, ரூ. ஒரு லட்சம், சங்கர் மனைவி பவித்ராவிடம் 28, ரூ. 80 ஆயிரம், துரைப்பாண்டி மனைவி லீலாவதியிடம் 48, ரூ. 40 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். இந்நிலையில் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத நிலையில் மூவரும், ஹேமாவிடம் கந்து வட்டி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். டவுன் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், கந்து வட்டி கேட்ட 3 பெண்களையும் கைது செய்தார்.உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிய மூவருக்கு வலைகடலுார்,-கடலுார், குண்டுஉப்பலவாடியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 40; அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த அப்பு, வினோத், வீரமணி ஆகிய 3 பேர் கடைக்கு வந்தனர்.மதுகுடிக்க ஓம்பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஓம்பிரகாைஷ தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச் சென்றனர். தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, கடைக்குள் இருந்த ஓம்பிரகாைஷ மீட்டனர். புகாரின் பேரில், அப்பு, வினோத், வீரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - chennai,இந்தியா
02-ஜூலை-202213:12:29 IST Report Abuse
RAMESH தமிழ் நாட்டில் திருட்டு திமுகா வை விமர்சனம் செய்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹைதராபாதில் பிரதமர், உள்துறை அமைச்சர், யோகிஜி அவர்களை கொல்வேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவனுக்கு கூப்பிடும் பொது வந்தா போறும்ன்னு நீதி தவறிய நீதிபதி சொல்லி அனுப்பறாரு . பாகிஸ்தானில் ஒரு இந்து இந்த மர்ம மனிதன் செய்ததை போல் செய்ய முடியுமா . உடனே அவனது தலை துண்டிக்க பட்டிருக்கும். நாடு எங்கே போகிறது. இவர்களை இப்போது அடக்கத் தவிரானால் இந்தியாவிற்கு இவர்கள் நிரந்தர தலைவலியாக இருப்பார்கள் .
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
01-ஜூலை-202213:07:14 IST Report Abuse
BALU பிரதமரைக் கொல்வேன் என வெளிப்படையாக சமூக வளைதளத்தில் சவால் விடும் தீவிர மூர்க்கனுக்கு ஜாமீன். சிறப்பு. சட்டமும் நீதிமன்றமும் மிகச் சிறப்பாகக் கடமை ஆற்றுகின்றன. அழிவை நோக்கியே அனைத்தும் வழிநடத்திச் செல்கின்றன. சட்டங்கள் ஏன் ஊருக்குஊர் நபருக்குநபர் நீதிபதிக்குத் தகுந்தபடியெல்லாம் எப்படி மாறுபடுகின்றன ஒன்றுமே புரியவில்லை.
Rate this:
Cancel
01-ஜூலை-202211:03:59 IST Report Abuse
அப்புசாமி கல்யாணம் பண்ணி வெக்குறதுக்கு முன்னாடி இதுமாதிரி வக்கிர பற்றி உண்ணவனான்னு விசாரியுங்க. அவனுடைய செல்போனை நோண்டி என்னென்ன வக்கிரங்கள் வெச்சிருக்கான்னு கண்டு பிடிக்கலாம். தண்ணி போடறவன், கஞ்சா, போதைக்காளான் சாப்புடறவனான்னு விசாரிச்சு பொண்ணைக் குடுங்க.
Rate this:
Raa - Chennai,இந்தியா
01-ஜூலை-202215:21:31 IST Report Abuse
Raaமுதலில் அவன் ஊரைப்பாருங்க.....திருக்குவளை.....ம்ம். உஷார் ஆகியிருக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X