'காங்கிரஸ், தி.மு.க., தலைவர்களுக்கு 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதி-'

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (46) | |
Advertisement
சென்னை : 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், அப்பாவி தையல் கடைக்காரர் கண்ணையாலாலை மத அடிப்படைவாதிகள், கழுத்தை
Congress, BJP, Vanathi Srinivasan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், அப்பாவி தையல் கடைக்காரர் கண்ணையாலாலை மத அடிப்படைவாதிகள், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.இதை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட, ஒட்டுமொத்த நாடும், இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வீடியோவில், பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


latest tamil news


ஜூன் 10-ம் தேதி கண்ணையாலாலை, ராஜஸ்தான் மாநில அரசு கைது செய்தது. தனக்கு 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்த தெரியாது என்று, அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.கடந்த 15-ம் தேதி, ஜாமினில் வெளிவந்த அவர், தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்பாவியான தையல் கடைக்காரரை கைது செய்து, அவரை மத வெறியர்களுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அடையாளம் காட்டியதே, இந்த கொடூரத்திற்கு காரணம்.தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நுாபுர் சர்மா பேசியதற்காக, இந்திய நாடே மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து அறிக்கை விட்டன.

ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால், அப்பாவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டும், 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட தலைவர்கள், எதுவுமே நடக்காதது போல மவுனமாகி விட்டனர். இவ்வாறு வானதி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
01-ஜூலை-202215:16:38 IST Report Abuse
Indhuindian இந்த அம்மாவுக்கு திராவிட மாடலை பத்தி ஒண்ணுமே தெரியலையே ஐயோ ஐயோ
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-ஜூலை-202214:51:53 IST Report Abuse
Vena Suna தீவிரவாதிகளை உருவாக்குவதில் காங்கிரஸும் திமுகவும் முதல் இடம்.
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
01-ஜூலை-202213:14:20 IST Report Abuse
Sivak .. தீய திமுகாவில் உள்ள ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒருநாள் உங்கள் கழுத்தும் அறுக்கப்பட்டு சாக தயாராகுங்கள் ...
Rate this:
01-ஜூலை-202214:11:54 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்நானூறு..ஐந்நூறு ஆண்டுக்கு முன் வந்த மொகலாயர்கள்...அப்படி செய்துட்டாங்க...இப்படி செய்துட்டாங்க என்று.. நஞ்சு எண்ணத்தை விதைக்க தெரிந்தவர்களுக்கு..45 வருடத்திற்கு முன் நடந்த விசயத்தை பேசி மக்களை முட்டாளாக்குவது ஒன்றும் கடினமில்லை... வரலாறுகள் தவறுகளை இனம் கண்டு அதிலிருந்து மனிதன் நாகரீகமாக முன்னேறத்தான் அனுபவமாக கிடைக்கிறது... துரதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்த பிரதமர்...பேதங்களையும்... மனிதருக்குள் வெறுப்புகளையும் விதைக்கிறார். அவர் சார்ந்த இயக்கம் இந்த சித்தாந்தத்தை அவர் மூலமாக தினிக்கிறது. இவர் ஜனநாயகத்தை மேன்மையை பேசுகிறார் என்றால்.. இவர்களால் ஜனநாயகம் சிரமத்தில் இருக்கிறது என்று அர்த்தம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X