சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் 'பீர்': குடிமகன்கள் அமோக வரவேற்பு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' மதுபானம் குடிமகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து 'நியூவாட்டர்'
Beer, Recycled Toilet Water, Singapore

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' மதுபானம் குடிமகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து 'நியூவாட்டர்' என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தவிர உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம் நியூவாட்டரை பயன்படுத்தி பீர் மதுபானம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீருக்கு சிங்கப்பூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக புருவெர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புருவெர்க்ஸ் நிறுவன தலைவர் மிட்ச் கிரிபோவ் கூறுகையில் ''நியூவாட்டரில் பீர் தயாரித்து பார்த்ததில் அது வழக்கமான சுவையுடன் இருந்தது. நீரில் உள்ள தாதுப் பொருட்கள் பீர் தயாரிப்புக்கான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிக்கின்றன'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
01-ஜூலை-202215:36:48 IST Report Abuse
Raa குடிக்கறதே போதைக்கு.....அதுக்கு இதில் இருந்து வந்தா என்ன? குடித்ததை கொட்டி...கொட்டியதை குடித்து..... ரகள போதை போ....
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
01-ஜூலை-202214:27:20 IST Report Abuse
V. Manoharan சுத்திகரிக்காத கழிவு நீரில் பீர் உற்பத்தி செய்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஏன் என்றால் பீர் வாசனை அந்த மாதிரி
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-ஜூலை-202212:09:49 IST Report Abuse
Vena Suna அய்யயோ...கேட்டாலே வாந்தி வருகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X