செப்., முதல் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை| Dinamalar

செப்., முதல் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
திருப்பூர்: ''செப்., மாதம் முதல், ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கு அதிக ஆர்டர் கிடைக்கும்'' என, திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், உலகளாவிய வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று, பின்னலாடை ரகங்களை தயாரித்து அனுப்புகின்றன. துவக்க காலம் முதல், பருத்தி இழையில், கோடைக்கால ஆடை ரகங்கள் தயாரிப்பிலேயே அதிக கவனம்

திருப்பூர்: ''செப்., மாதம் முதல், ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கு அதிக ஆர்டர் கிடைக்கும்'' என, திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், உலகளாவிய வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று, பின்னலாடை ரகங்களை தயாரித்து அனுப்புகின்றன. துவக்க காலம் முதல், பருத்தி இழையில், கோடைக்கால ஆடை ரகங்கள் தயாரிப்பிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.



latest tamil news




ஆண்டுதோறும், குளிர் கால ஆடை தயாரிப்பு காலங்களில், நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குறைந்துவிடுகின்றன. வரலாறு காணாத பஞ்சு விலையால், ஒசைரி நுால் ரகங்கள் விலை இரட்டிப்பாகி உள்ளது. பின்னலாடைகளின் விலை உயர்ந்துள்ளதாலும், குளிர் கால ஆடை தயாரிப்பு சீசன் துவங்கியுள்ளதாலும், திருப்பூர் நிறுவனங்களுக்கு தற்போது வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை குறைந்துள்ளது.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
தற்போது, திருப்பூரின் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி மந்த கதியில் நடக்கிறது. இதற்கு நுால் விலை உயர்வை விட, சீசன்தான் மிக முக்கிய காரணியாக உள்ளது. குளிர் கால ஆடை தயாரிப்பு காலம் என்பதாலேயே, வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வரும் ஆக., மாதம் வரை, மூன்று மாதங்கள் இந்த மந்த நிலை நீடிக்கும்.

பஞ்சு விலை குறைய துவங்கி விட்டது. வரும் நாட்களில், ஒசைரி நுால் விலையும் குறைந்துவிடும். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் உருவாகிவருகிறது.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து செப்., மாதம் முதல், கோடைக்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வரத்துவங்கும். அப்போது, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அதிகளவு ஆர்டர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.


latest tamil news




பாலியெஸ்டர், விஸ்கோஸ் உள்பட செயற்கை நுாலிழை, துணி ரகங்கள் உள்ளூரில் எளிதில் கிடைக்கிறது.நிறுவனங்கள் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், தொய்வின்றி, ஆண்டு முழுவதும் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களை அதிகளவு பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

பாலியெஸ்டர், விஸ்கோஸ் உள்பட செயற்கை நுாலிழை, துணி ரகங்கள் உள்ளூரில் எளிதில் கிடைக்கிறது. நிறுவனங்கள் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், தொய்வின்றி, ஆண்டு முழுவதும் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களை அதிகளவு பெற முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X