ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா?

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டுமிராண்டியை போல மைக்கை பிடித்து, கடித்து குதறினார். அ.தி.மு.க.,வினருக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து, நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது
பேச்சு_பேட்டி_அறிக்கை, பெரியகருப்பன், திமுக

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டுமிராண்டியை போல மைக்கை பிடித்து, கடித்து குதறினார். அ.தி.மு.க.,வினருக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து, நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான்.

ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், தற்போது நீங்கள் தானே ஆட்சியில் இருக்கீங்க... நீங்க இப்ப அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா என்ன?தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். மதத்தின் பெயரால், சட்டத்தை கையில் எடுத்து கொலை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. காட்டு மிராண்டித்தனமான கொடூர கொலையை செய்தவர்களுக்கு, உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

'இதுபோன்ற வழக்குகளில், அதிகபட்சம் மூன்றே மாதங்களில் விசாரணை முடிந்து, உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்' என சட்ட திருத்தம் செய்வது அவசியம்!latest tamil news


த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி:
தி.மு.க.,வை எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்கள் ஏமாந்து போயுள்ளனர். மாநில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லாமல், அகில இந்திய பிரச்னைகளை பேசி வருகிறது. இனி வரும் தேர்தலில், தி.மு.க.,வை மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க., அள்ளி வீசியது; ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'கஜானா காலியாக உள்ளது' எனக்கூறி, அனைத்து வாக்கு உறுதிகளையும் கிடப்பில் போட்டு விட்டது.

வாக்குறுதிகளை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகத் தானே, அகில இந்திய பிரச்னைகளை பேசி, திசை திருப்பிட்டு இருக்காங்க என்பது தங்களுக்கு புரியவில்லையா?கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் பேட்டி:
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, நிரந்தரமாக செயல்படக்கூடிய விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இக்குழு ஆறு மாதத்திற்கு ஒரு முறை விலையை நிர்ணயிக்க வேண்டும். அதற்கான ஏற் பாட்டை, தமிழக அரசு செய்ய வேண்டும்.

கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, அரசுக்கு நிஜமாகவே அக்கறை இருக்குமானால், இந்த யோசனைக்கு செவிசாய்க்கும் என நம்புவோம்!தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சங்கர் பேட்டி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1.20 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அரசின் உத்தரவு பாதிப்பை தரும். தமிழக அரசு, தகுதி வாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால், அவர்களுக்கு கை நிறைய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க, அரசிடம் நிதி இல்லை போலும்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202212:31:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     2014 மே மாதத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 9.48. அது தற்போது ரூபாய் 27.90. டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014ல் ரூபாய் 400க இருந்தது, தற்போது ரூபாய் 1015-க விற்கப்படுகிறது. 2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வறுமை குறியீட்டு அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக இருபது கோடி இந்தியர்களை வறுமைக்கு தள்ளியாகிவிட்டது. ஆனால் கொரோன காலத்தில் கார்பொரேட் நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. ஸ்விஸ் வங்கியில் இந்திய கருப்பு பணம் உச்ச பட்ச அளவை அடைந்துள்ளது. அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல். இந்த லட்சணத்தில் பெருமை வேறு. சுரணை என்பது கொஞ்சம் கூட கிடையாதா? வெட்கக்கேடு.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
01-ஜூலை-202219:51:20 IST Report Abuse
Darmavanகாமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் .திருட்டு கட்சிக்கு வக்காலத்து.கொரானாவில் செய்திருந்தால் இவன் நிலை என்ன....
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
01-ஜூலை-202212:15:41 IST Report Abuse
தமிழன் "நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால், அவர்களுக்கு கை நிறைய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க, அரசிடம் நிதி இல்லை போலும்" - அக்னிபாத் திட்டத்தில் நான்கு வருடங்கள் கழித்து வீரர்கள் வெளிவரும் போது பென்ஷன் கொடுக்க வேண்டும் என கதறிய குடும்ப கொத்தடிமைகள் இதனை ஏற்பரா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-ஜூலை-202211:50:08 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் உள்ள அந்த இரண்டு கட்சிகளும், ஆட்சியில் இருந்தாலும் கொள்ளை அடிப்பார்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் கொள்ளை அடிப்பார்கள். ஆனால், ஒருத்தர் மீது ஒருத்தர் குற்றம் சுமத்தி, பகல் நேரத்தில் மக்களை திசைதிருப்பி, இரவு ஆனவுடன், ஒதுக்குப்புறத்தில் ஒன்றாக குடித்து கும்மாளம் அடிப்பார்கள். மக்களுக்கு இது தெரியும். இருந்தும் 'நமக்கு எதுக்குடா வம்பு' என்று கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். மக்களுக்கு வேண்டியது 'இலவசம்'. அது கிடைத்தால் போதும்.... வெட்கம் வேதனை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X