ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா?| Dinamalar

ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா?

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (6) | |
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டுமிராண்டியை போல மைக்கை பிடித்து, கடித்து குதறினார். அ.தி.மு.க.,வினருக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து, நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது
பேச்சு_பேட்டி_அறிக்கை, பெரியகருப்பன், திமுக

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டுமிராண்டியை போல மைக்கை பிடித்து, கடித்து குதறினார். அ.தி.மு.க.,வினருக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லை. அவர்களின் எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து, நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான்.

ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், தற்போது நீங்கள் தானே ஆட்சியில் இருக்கீங்க... நீங்க இப்ப அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா என்ன?



தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். மதத்தின் பெயரால், சட்டத்தை கையில் எடுத்து கொலை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. காட்டு மிராண்டித்தனமான கொடூர கொலையை செய்தவர்களுக்கு, உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

'இதுபோன்ற வழக்குகளில், அதிகபட்சம் மூன்றே மாதங்களில் விசாரணை முடிந்து, உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்' என சட்ட திருத்தம் செய்வது அவசியம்!



latest tamil news


த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி:
தி.மு.க.,வை எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்கள் ஏமாந்து போயுள்ளனர். மாநில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லாமல், அகில இந்திய பிரச்னைகளை பேசி வருகிறது. இனி வரும் தேர்தலில், தி.மு.க.,வை மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க., அள்ளி வீசியது; ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'கஜானா காலியாக உள்ளது' எனக்கூறி, அனைத்து வாக்கு உறுதிகளையும் கிடப்பில் போட்டு விட்டது.

வாக்குறுதிகளை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகத் தானே, அகில இந்திய பிரச்னைகளை பேசி, திசை திருப்பிட்டு இருக்காங்க என்பது தங்களுக்கு புரியவில்லையா?



கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் பேட்டி:
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, நிரந்தரமாக செயல்படக்கூடிய விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இக்குழு ஆறு மாதத்திற்கு ஒரு முறை விலையை நிர்ணயிக்க வேண்டும். அதற்கான ஏற் பாட்டை, தமிழக அரசு செய்ய வேண்டும்.

கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, அரசுக்கு நிஜமாகவே அக்கறை இருக்குமானால், இந்த யோசனைக்கு செவிசாய்க்கும் என நம்புவோம்!



தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சங்கர் பேட்டி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1.20 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அரசின் உத்தரவு பாதிப்பை தரும். தமிழக அரசு, தகுதி வாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால், அவர்களுக்கு கை நிறைய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க, அரசிடம் நிதி இல்லை போலும்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X