ஆளும்கட்சியினர் தலையீட்டை தடுக்க தற்காலிக ஆசிரியர் நியமனம் நிறுத்தம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
அரசியல் தலையீடு காரணமாக, தற்காலிக ஆசிரியர் நியமனம் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 4,989 இடைநிலை மற்றும் 5,154


அரசியல் தலையீடு காரணமாக, தற்காலிக ஆசிரியர் நியமனம் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை, தற்காலிக
ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை? ஐகோர்ட்

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 4,989 இடைநிலை மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, ௨௦௨௩ ஏப்., வரையிலும்; 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, ௨௦௨௩ பிப்., வரையிலும், தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு வழியாக
நியமனம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதற்காக எந்த வழிகாட்டு விதிமுறைகளும் அறிவிக்கப்படவில்லை. அதனால், உள்ளூர் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள், மேலாண்மை குழுவில் இடம்பெற்றுள்ள கவுன்சிலர்கள் உள்ளிட்டோரிடம், தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.
சில இடங்களில் ஆளும் கட்சி புள்ளிகள் தரப்பில், 'அட்வான்ஸ் புக்கிங்' செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், 'தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், அந்த நியமனத்தை நிறுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை மட்டுமே, உரிய முறையில் நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும்' என, போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக,
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள தகவல்:
பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு, முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இந்த முன்னுரிமைகள் எதையும் பின்பற்றாமல், தங்களின் விருப்பப்படி நியமனம் நடப்பதாக தகவல்கள்
வருகின்றன.
எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில், எவ்வாறு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை, தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது.
இதுகுறித்த தெளிவுரைகள், விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்கு பின்னரே, தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து, தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X