சிலவரி அரசியல்...

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பா.ஜ., கோரிக்கையை ஏற்றுப் பணி நியமன ஆணைகளை நிறுத்தி வைத்தமைக்கு தி.மு.க., அரசுக்கு நன்றி. ஆசிரியர் தகுதித்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுப் பணி நியமனத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். - அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்வர் ஸ்டாலின்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பா.ஜ., கோரிக்கையை ஏற்றுப் பணி நியமன ஆணைகளை நிறுத்தி வைத்தமைக்கு தி.மு.க., அரசுக்கு நன்றி. ஆசிரியர் தகுதித்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுப் பணி நியமனத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். - அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

உதய்பூரில் கன்னையா லாலை படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

அ.தி.மு.க., தமிழகத்தின் பலமான எதிர்க்கட்சியாக ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மறுபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. - வாசன், த.மா.கா., தலைவர்

தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியின் படி, அரசுப்பள்ளிகளில் உள்ள 13,331 காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.- வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, தற்காலிக நியமனத்தை கைவிட்டு தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்.- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்

உதய்ப்பூர் கன்னையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றம். அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை. முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். - திருமாவளவன், வி.சி., தலைவர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
01-ஜூலை-202212:56:11 IST Report Abuse
a natanasabapathy Kurumaa muslim mathathulku maarivittaar. Yenave thaan ivvaaru kooroyullaar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X