ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை: நாடு முழுதும் அமல்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது.ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத்தொடா்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி
SingleUse Plastic, Ban, July 1, பிளாஸ்டிக் பொருட்கள், தடை, அமல்

புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத்தொடா்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.


latest tamil news



அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202209:04:51 IST Report Abuse
அப்புசாமி ஆஹா... திட்டம் வெற்றி. இன்னிக்கி பால் பாத்திரத்தில் ஊத்திட்டுப் போனாங்க. ஓட்டலில் சாம்பார், சட்னி பார்சல் குடுக்குறதை நிறுத்திட்டாங்க. சாக்லெட் கூட ப்ளாஸ்டிக் ராப்பரை எடுத்துட்டு குடுக்குறாங்க.
Rate this:
Cancel
01-ஜூலை-202214:56:27 IST Report Abuse
அப்புசாமி இன்னிக்கி ஆவின் பால் பாக்கெட்லதானே குடுத்தாங்க. ஒரு தடவை உபயோகிச்சுட்டு தூக்கி போட்டுடறோமே... அதே மாதிரிதான் ஷாம்பூ பாக்கெட், பாக்கு பொட்டலம், நெய் பாக்கெட், ஓட்டல்ல சாம்பார், சட்னி.... எதுவும் மாறலியே... அப்புறம் அந்த தெர்மோகோல்...
Rate this:
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202212:37:42 IST Report Abuse
Nancy பயன்பாடுடை தடை செய்வதற்கு முன் உற்பத்தியை தடை செய்யலாமே - தானாகவே பயன்பாடு முடிந்து விடும் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X