வைட் காலர் ஜாப்ஸ் என கூறப்படும் உட்கார்ந்து வேலை பார்க்கும் பணியை தான் இப்போது அதிகம் பேர் விருப்புகின்றனர். குறிப்பாக ஐ.டி., ஊழியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நேரம் போவது தெரியாமல் அப்படியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்னை கழுத்து வலி.
கழுத்து வலியானது தோள்பட்டை மற்றும் கழுத்து சேரும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும். கழுத்து வலி வந்தால் நம்மால் எந்த ஒரு வேலையினையும் முழுமையாக செய்ய முடியாது. வலி நம் வேலையை சரியாக செய்யவிடாது.
வலிக்கான காரணங்கள்:
![]()
|
• கழுத்து வலிக்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது நாம் உறங்கும் போது சரியாக படுக்காமல் இருப்பதும், அமர்ந்து வேலை பார்க்கும் போது சரியான நிலையில் உட்காரமல் இருப்பதும் தான்.
• தலையில், கழுத்து பகுதிகளில் அடிபட்ட காயம் இருந்தால் கழுத்து வலி வரும். சுளுக்கு பிடித்தாலும் வலி வரும்.
• மேலும் அளவிற்கு அதிகமான மன அழுத்தமும் ஒரு காரணமாகும்.
• சிலருக்கு நீண்ட நேரம் தவறான கோணத்தில் கழுத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் வலி வரும்.
• நீண்ட நேரம் குனிந்தவாறு படிப்பது அல்லது எழுதுவதும் பிரச்னையே.
• ஒரு வயதிற்கு மேல் ஏற்படும் எலும்புத் தேய்மானமும் ஒரு காரணம்.
கழுத்து வலிக்கான அறிகுறிகள் :
• கழுத்து மற்றும் சுற்றியுள்ள பகுதியில் விறைப்பு, அழுத்தம் போன்ற உணர்வு.
• கழுத்துப் பகுதியில் ஊசி குத்துவது போன்ற கூர்மையான வலி
• கழுத்தை அசைக்க முடியாமல் கஷ்டப்படுவது.
மருத்துவரை எப்போது அணுகலாம்:
• தலையை அசைக்க முடியாத அல்லது திருப்ப முடியாத நிலை
• தாங்கவே முடியாத அளவிலான கழுத்து வலி
• எதையும் விழுங்க முடியாத நிலை
• மூச்சு விட சிரமம் ஏற்படுதல்
இப்படி எதோ ஒரு பிரச்னை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். ஆரம்ப நிலையில் பிசியோதெரபி சிகிக்சை மேற்கொண்டால் முழு வலி நிவாரணம் பெறலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கழுத்து வலி குணமாக
![]()
|
• கழுத்து பகுதியில் வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தரலாம்.
• கடுமையான வலி இருக்கும் சமயத்தில் கண்டிப்பாக படுத்து ஓய்வு எடுக்கவும்.
• ஒரே நிலையில் அதிக நேரம் கழுத்தை வைத்திருக்காமல், அடிக்கடி தலையை அசைக்கவும். இதனால் தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கலாம்.
• அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன் அமரும்போது, முதுகை நேராக வைத்து, நேரான கோணத்தில் அமரவும்.
• மேலும் பணியாற்றும்போது தலைகவிழ்ந்து வேலை பார்ப்பதை தவிர்க்கவும்.
• உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம்.