ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 1.44 லட்சம் கோடி

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட 56 சதவீதம் அதிகம் ஆகும்.ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை
GST, collection,June, FM,ஜிஎஸ்டி, வசூல், நிதியமைச்சகம், மத்திய நிதியமைச்சகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட 56 சதவீதம் அதிகம் ஆகும்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூலான ரூ.1,44,616 கோடியில்,

சிஜிஎஸ்டி ரூ.23,306 கோடி
எஸ்ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.75,887 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,102 கோடி உட்பட)
செஸ் ரூ.11,018 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,197 கோடி உட்பட) அடங்கும்.


latest tamil news




ஜூன் மாத வசூலானது, கடந்த ஏப்., மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து மிகப்பெரிய தொகையாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் போலி பில் தயாரித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swami Nathan - Bangalore,இந்தியா
01-ஜூலை-202216:56:10 IST Report Abuse
Swami Nathan எல்லா பண பரிமாற்றத்துக்கும் 28% என்று செய்துவிடுங்கள், 5 லட்சம் கோடியை உடனே தொட்டுவிடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X