பழைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
”நீங்கள் இப்போது தான் டிகிரி முடிச்சிருக்கலாம். அல்லது கல்லூரியில் இருந்து இடையில் நின்றவர்களா இருக்கலாம். 48 ஆண்டுக்கு முந்தைய என்னோட ரெஸ்யூமை விட, உங்க ரெஸ்யூம் நன்றாக இருக்குமுன்னு நான் உறுதியாக சொல்லுவேன்” என தன்னடக்கமாக தனது பழைய ஒரு பக்க ரெஸ்யூமை லிங்க்டுஇன் தளத்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார். அதில்
பில்கேட்ஸ், ரெஸ்யூம்,Old Resume, Bill gates, Skill set,Inspiration, Employment, trending”நீங்கள் இப்போது தான் டிகிரி முடிச்சிருக்கலாம். அல்லது கல்லூரியில் இருந்து இடையில் நின்றவர்களா இருக்கலாம். 48 ஆண்டுக்கு முந்தைய என்னோட ரெஸ்யூமை விட, உங்க ரெஸ்யூம் நன்றாக இருக்குமுன்னு நான் உறுதியாக சொல்லுவேன்” என தன்னடக்கமாக தனது பழைய ஒரு பக்க ரெஸ்யூமை லிங்க்டுஇன் தளத்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.அதில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்மான தகவல்கள்:

பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமை டைப் ரைட்டர் இயந்திரத்தில் தட்டச்சு செய்துள்ளார். அதில் முதலில் பெயர், முகவரியை குறிப்பிட்டு, அதன் தொடர்ச்சியாக உயரம் 5 அடி 10 அங்குலம், எடை 59 கிலோ என குறிப்பிட்டுள்ளார். மேலும் 12,000 டாலர் சம்பளமாக எதிர்பார்ப்பதாகவும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று பணிபுரிய தயார் என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


கல்வித்தகுதி என குறிப்பிட்டு, ஹார்வர்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகவும், ஆபரேட்டிங் சிஸ்டம் அமைப்பு, டேட்டா பேஸ் மேலாண்மை, கம்யூட்டர் கிராபிக்ஸ் தெரியுமென கூறியுள்ளார்.

அனுபவம் பிரிவில், பிடிபி, நோவா, ஃபோர்ட்ரான், கோபால், அல்கால், பேசிக் என பெரும்பாலான அனைத்து கம்யூட்டர் லாங்குவேஜ்களும் தெரியுமெனவும், பவர் க்ண்ட்ரோல் ரியல் டைம் சிஸ்டம், பே ரோல் உள்ளிட்டவை குறிப்பிட்டு, ஓரிகான், வாஷிங்டன் லேக்சைடு ஸ்கூல், பால் ஆலனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதாக கூறியுள்ளார்.


latest tamil newsபில்கேட்ஸ் ரெஸ்யூம் குறித்து ஒருவர், ”நன்றி பில்கேட்ஸ். ஒரு பக்க ரெஸ்யூம் அருமை. நாம் அனைவரும் ஒருமுறை பழைய ரெஸ்யூமை போய் பார்க்க வேண்டும். நாம் வாழ்வில் என்ன சாதித்தோம் என்பதை மறந்து விடுகிறோம். என்னால் மகிழ்ச்சியாக ஒன்றை சொல்ல முடியும். அது உயரம், எடை உள்ளிட்ட விவரங்கள் இனி ரெஸ்யூமில் தேவைப்படாது” என கூறியுள்ளார்.

மற்றொருவர், ”பில்கேட்ஸ். ஒரு பக்க ரெஸ்யூம் எளிமையாக உள்ளது. ஆனால் இதில் உள்ள விவரங்கள், தற்போது நாங்கள் பார்க்கும் பல ரெஸ்யூம்களை விட சிறப்பான ஒன்றாக உள்ளது. முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டுமெனில், நீங்கள் பட்டம் பெறாமலே, பல திறமைகளை கையில் வைத்துள்ளீர்கள். இது இன்றைக்கு டிகிரி பெரிய விஷயமில்லை. திறமை தான் விஷயம் என உண்மையை உரக்க கூறியிருக்கிறீர்” என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X