வேலுமணி கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு| Dinamalar

வேலுமணி கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக.,வின் ஆர்எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர்
வேலுமணி, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், எஸ்பிவேலுமணி,

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக.,வின் ஆர்எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வேலுமணி வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து 18 ம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதுடன், அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேலுமணியின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X