ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல: உத்தவ் தாக்கரே| Dinamalar

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல: உத்தவ் தாக்கரே

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (10) | |
மும்பை: தற்போதைய மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல என முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றிப்பெற்றது. தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அதிகாரத்தை இருகட்சிகளுக்கும் அளிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக சிவசேனா தலைவர் உத்தவ்
Uddhav Thackeray, Shiv Sena, Maharashtra, Amit Shah, Kept His Word, Cutting Rejoinder, உத்தவ் தாக்கரே, சிவசேனா, மஹாராஷ்டிரா, ஏக்நாத் ஷிண்டே, முதல்வர், அமித்ஷா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: தற்போதைய மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல என முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றிப்பெற்றது. தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அதிகாரத்தை இருகட்சிகளுக்கும் அளிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதற்கு பா.ஜ., தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. முதல்வர் பதவிக்காக இரு கட்சிகளும் 30 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். இந்த நிலையில் சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து மஹா., கவர்னரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்ற கவர்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனாவை சேர்ந்தவருக்கு பா.ஜ., முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்திருப்பது குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: புதிய அரசாங்கத்தை அமைத்தவர்கள், சிவசேனாவை சேர்ந்தவரை முதல்வராக்கி இருப்பதாக சொல்கிறார்கள். தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் அல்ல. நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இதையே தான் சொன்னேன். எனக்கும் அமித்ஷாவுக்கும் இடையே இதே பார்முலா முடிவு செய்யப்பட்டது.


latest tamil news


அதாவது, சிவசேனா - பாஜ., கூட்டணியின் போது 2019ல் அமித்ஷாவிடம் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்துக் கொள்ளலாம் என கூறியிருந்தேன். அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். தேர்தலுக்கு பிறகு அதனை ஏற்க மறுத்து விட்டனர். மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.,வுடன் சிவசேனா நெருக்கமான கூட்டணியில் இருந்தபோதும் கூட அப்போது மறுத்துவிட்டு, இப்போது ஏன் பா.ஜ., செய்கிறது. வேறு கட்சியினர் ஒருவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது எனில் 2019ம் ஆண்டே மரியாதையுடன் செய்திருக்கலாமே. அப்போதே இதனை செய்திருந்தால் ‛மஹா விகாஸ் அகாடி' கூட்டணி அமைந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X