தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள்: தஞ்சையில் காணாமல் போய் லண்டனில் கண்டுபிடிப்பு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில், இருந்து திருடு போன புதிய அத்தியாயம் என்னும் பைபிள் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள் என்னும் சிறப்புடையது.பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682ம் ஆண்டு
தஞ்சாவூர், சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பைபிள், லண்டன், கண்டுபிடிப்பு, புதிய அத்தியாயம், பைபிள், அருங்காட்சியகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில், இருந்து திருடு போன புதிய அத்தியாயம் என்னும் பைபிள் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள் என்னும் சிறப்புடையது.

பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுாதரன் தேவாலயத்தில் கிருத்துவ மதபோதகராக இவர் பணியாற்றினார். டென் மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும் கென்ரிக் என்பவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706ம் ஆண்டு இந்தியா வந்தார். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படைப்புகளை வெளியிட்டார். இவர் பைபிளின் "புதிய அத்தியாயத்தை" தமிழில் 1715 ம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ம் ஆண்டு மறைந்தார்.


தமிழகத்தில் இருந்து பைபிள் திருட்டு லண்டன் மியூசியத்தில் கண்டுபிடிப்பு

latest tamil newsஇந்த தமிழ் மொழிபெயர்ப்பான புதிய அத்தியாயம் மட்டுமல்லாது இரண்டு தேவாலயங்கள் மற்றும் ஒரு பிரார்த்தனை கூடத்தை கட்டியதோடு 250 க்கும் மேற்பட்ட கிருத்துவர்களுக்கு ஞானஸ்தானமும் வழங்கியுள்ளார். சீகன் பால்க் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட ஒரு அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

விலைமதிப்பில்லாத இந்த பைபிளானது காணாமல் போய்விட்டதாக கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு போலீசில் கொடுத்த ஒரு புகாரானது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புராதானமான பைபிள் களவுபோனது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. வெளிநாட்டிலுள்ள சிலைகள் மற்றும் கலைபொருட்களை விரைந்து மீட்கும் முயற்சியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு, டிஐஜி ஜெயந்த் முரளி, உத்தரவின் பேரில், ஐ ஜி தினகரன், காணாமல் போன இந்த பைபிளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.


latest tamil news


இத்தனிப்படையினர் அந்த அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை பார்வையிட்ட போது சில வெளிநாட்டினர் கடந்த 2005ம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க் அவர்களின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வருகை தந்ததும் சீகன் பால்க் சம்மந்தப்பட்ட இடங்களையும் தொண்டாற்றிய நிறுவனங்களை பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இத்தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களை ஆராய்ச்சி செய்ததில் காணாமல் போன 17ம் நுாற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய இந்த திருடப்பட்ட பைபிளானது கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் பல்வேறு புலன் விசாரணையில் மேற்படி பைபிள் சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது எவ்வாறு, யார் மூலம் அங்கு சென்றது என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202214:00:36 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K இந்த புத்தகத்தால் என்ன பயன் ??? 10 பைசவுக்கு பிரயோஜனம் கிடையாது. அது அந்த ஊரிலேயே கிடக்கட்டும். நம் பண்டைய தமிழ் இலக்கியங்கள் போல் வருமா ??? அல்லது நமது 5000 வருட பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம், மஹாபாரதம் போல் வருமா ???
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202208:12:51 IST Report Abuse
Venugopal S தமிழ் மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் உரு மாற்றம் அடைந்து தற்போதைய உரு அடைந்துள்ளது.முன்னூறு வருடங்களுக்கு முந்தைய உருவில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது.மாற்றங்களை ஏற்றுக் கொண்டு உருமாற்றம் அடைந்து கொண்டே வந்ததால் தான் தமிழ் மொழி இன்றும் ஒரு உயிருள்ள மக்கள் பேச்சு வழக்கில் உள்ள மொழியாக உள்ளது.இல்லாவிட்டால் சமஸ்கிருதம் போல் என்றோ செத்துப் போயிருக்கும்.இது புரியாமல் இப்புத்தகத்தில் தமிழைப் பிழையாக எழுதி இருப்பதாக் கூற பாஜகவின் அறிவுஜீவிகளால் மட்டுமே முடியும்.
Rate this:
02-ஜூலை-202213:08:31 IST Report Abuse
ஆரூர் ரங்முக்கால்வாசி சமஸ்கிருதம் கலந்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார்கள்🤔 என்பது புரியவில்லையா?.இல்லை புரியாதது போல நடிக்கிறீர்களா? சமஸ்கிருத மொழி எப்போதும் போல மந்திரங்கள் வடிவில் வாழ்கிறது. நாட்டில் பெரும்பாலான மக்கள் 40 முதல் 60 சதவீதம் சமஸ்கிருதம் கலந்த மொழிகளையே பேசுகிறார்கள் .சமச்சீர் மட்டுமே விரைவில் தமிழை அழித்து விடும்....
Rate this:
02-ஜூலை-202213:10:59 IST Report Abuse
ஆரூர் ரங்நீங்கள் எழுதியுள்ளதிலேயே உருவம் ( ரூபம்) புத்தகம் ( புஸ்தகம்) போன்ற சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்க்க முடியவில்லையே. தமிழ் உயிர் என்றால் சமஸ்கிருதம் அதன் மூச்சு ....
Rate this:
Cancel
02-ஜூலை-202207:30:20 IST Report Abuse
ஆரூர் ரங் முதல். முழுமையான பைபிள் மொழி பெயர்ப்பு புத்தகம் தம்பிரான் வணக்கம். கேரளாவில் ஒரு தமிழ் தச்சர் கைவண்ணத்தில் உருவானது என்பதே வரலாறு. அக்காலத்தில் எழுத்துக் கோர்க்கும் தொழில் நுட்பம் இல்லாததால், எழுத்துக்களை மரப் பலகைகளில் இடம் வலமாக செதுக்கி அதில் மை தேய்த்து அச்சிட்டார்களாம். ஹிந்து மந்திரங்கள் வாய் மொழி யாக மட்டுமே கற்பிக்கப்படுவதால்தான் நிஜமான உயிர்ப்பு சக்தியுடன் திகழ்கின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X