பா.ஜ.,வில் இணைகிறாரா அமரீந்தர் சிங்?

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் 3 முறை முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த முறை அவர் முதல்வராக இருந்த போது, பஞ்சாப் மாநில தலைவராக சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக்
Amarinder Singh, B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் 3 முறை முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த முறை அவர் முதல்வராக இருந்த போது, பஞ்சாப் மாநில தலைவராக சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு ஓய்வில் இருந்த அமரீந்தர் தற்போது அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். அடுத்த வாரம் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.


latest tamil news


இந்நிலையில், அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது கட்சியையும் பா.ஜ.,வுடன் இணைக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பஞ்சாப் திரும்பியதும் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜக்கார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் அக்கட்சியிலேயே நீடிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
01-ஜூலை-202219:04:41 IST Report Abuse
bal தேர்தலுக்கு முன்னாள் சேர்ந்து போட்டியிட்ட ஒன்னும் பண்ண முடியல..இப்ப என்னவாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X