ஆன்மிகமும், காவியும் சேர்ந்ததுதான் தமிழகம்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
வேலுார்: ஆன்மிகமும், காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.வேலுார் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மகாலில், நாராயணி பீடம், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. இன்று (ஜூலை 1) நடந்த பெண்
Governor, Tamilisai Soundararajan, Vellore, கவர்னர், தமிழகம், தமிழிசை, தமிழிசை சவுந்தரராஜன், வேலூர், ஆன்மிகம், காவி, தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார்: ஆன்மிகமும், காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

வேலுார் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மகாலில், நாராயணி பீடம், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. இன்று (ஜூலை 1) நடந்த பெண் துறவிகள் பங்கேற்ற சக்தி மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: காவி தான் ஆன்மீகம். ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ்தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.


latest tamil news


ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகமும், காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். ஆனால் பலம் பொருந்திய காவி துறவி பெண்களை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில், ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்து வழிபாடோடுதான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம், சிதம்பரம் நடராஜர் கோவிலக்கு போவதுண்டு. இன்னும் சொல்லப் போனால், நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும், விஞ்ஞானமும் சொல்கிறது.


latest tamil news


நாராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அதுதான் சுதந்திரம் என்றால் அது சுதந்திரம் இல்லை. அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் நாமெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மரியாதையாக இருந்து கொண்டிருக்கிறது. எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார். மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர் கிறிஸ்துமஸூக்கு வாழத்து சொல்வார், ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்வார். ஆனால் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்ல மாட்டார். ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. அந்தந்த மாநில அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கும் ஏற்ப, அரசியல் சட்டத்தின்படி தான் செயல்படுகிறார்கள். நானும் அவ்வாறு தான் செயல்படுகிறேன். மற்ற மாநில கவர்னர்களும் அப்படிதான் செயல்படுகிறார்கள். கவர்னர்கள் எந்த கட்சியையும் உடைக்கவில்லை. அவர்களாகவே தங்களுக்குள் உடைத்துக் கொணடு கவர்னர் மீது குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202212:56:19 IST Report Abuse
Venugopal S ஆன்மீகமும் காவியும் சேர்ந்தது தான் தமிழகம் என்பது ஓரளவுக்கு உண்மை ஆனால் தமிழக அரசியலில் இவை இரண்டுக்கும் இடமில்லை என்பதும் உண்மை திருமதி தமிழிசை அவர்களே!
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
02-ஜூலை-202211:35:54 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ரெண்டு கவர்னர்கள் புரியும் நல்ல செய்ஹை களால் இந்துக்களுக்கு ஒரு சிறிய தற்காலிக சந்தோசம் அவ்வப்போது கிடைக்கிறது .இதுவே நிரந்தரமாக கிடைக்க ஆண்டவர் அருள் புரிவாராக .
Rate this:
Cancel
02-ஜூலை-202207:31:34 IST Report Abuse
அப்புசாமி திவ்ய்பிரபந்தமும், அதில் உள்ள திருப்பாவையும் கிட்டத்தட்ட 6 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. அதுக்கு முன்னாடியே திருக்குறள், சங்கத் தமிழ் இலக்கியங்கள் எத்தனையோ உள்ளன.
Rate this:
02-ஜூலை-202210:35:05 IST Report Abuse
ஆரூர் ரங்தொல்காப்பியத்தில் ஐந்திணை கடவுளராக இந்திரன் வருணன் முருகன் விஷ்ணு துர்க்கை பற்றிய பாடல்கள் உண்டு. திருக்குறளில் விஷ்ணு, இந்திரன் வருணன், லக்ஷ்மி சிவன்🤔 ஆகிய தெய்வங்களை குறிக்கும் பாடல்கள் உண்டு. புறநானூற்றில் இதை விட அதிகமாக உண்டு ....
Rate this:
02-ஜூலை-202210:35:12 IST Report Abuse
ஆரூர் ரங்தொல்காப்பியத்தில் ஐந்திணை கடவுளராக இந்திரன் வருணன் முருகன் விஷ்ணு துர்க்கை பற்றிய பாடல்கள் உண்டு. திருக்குறளில் விஷ்ணு, இந்திரன் வருணன், லக்ஷ்மி சிவன்🤔 ஆகிய தெய்வங்களை குறிக்கும் பாடல்கள் உண்டு. புறநானூற்றில் இதை விட அதிகமாக உண்டு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X