வயநாடு தொகுதியில் ராகுல் பேரணி: நடந்தே சென்றார்| Dinamalar

வயநாடு தொகுதியில் ராகுல் பேரணி: நடந்தே சென்றார்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (11) | |
வயநாடு: கேரள வந்திருந்த காங்., எம்.பி., ராகுல் தனது தொகுதியில் மெகா பேரணி நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுடன் நடந்தே சென்றார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல் , கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த மாதம் ஜூன் 24-ம் தேதி இவரது கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்கிஸ்ட், கம்யூ. கட்சியின் மாணவர் அமைப்பினர் அலுவலகத்தினை தாக்கி
வயநாடு ,தொகுதி ,  கட்சி தொண்டர்கள் , ராகுல் பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வயநாடு: கேரள வந்திருந்த காங்., எம்.பி., ராகுல் தனது தொகுதியில் மெகா பேரணி நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுடன் நடந்தே சென்றார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல் , கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த மாதம் ஜூன் 24-ம் தேதி இவரது கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்கிஸ்ட், கம்யூ. கட்சியின் மாணவர் அமைப்பினர் அலுவலகத்தினை தாக்கி சூறையாடினர்.


latest tamil news





இந்நிலையில் மூன்று நாள் பயணமாக காங்., எம்.பி.,ராகுல் இன்று வயநாடு வந்தார். அப்போது தாக்குதலுக்குள்ளான கட்சி அலுவலகத்தினை பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது.மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என பேட்டியளித்தார்.

இதைத் தொடர்ந்து தனது தொகுதிக்குப்பட்ட முக்கிய வீதியில் இன்று நடந்தே சென்று மெகா பேரணி நடத்தினார். அவருடன் மாநில தலைவர் உள்ளிட்ட கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்களும் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X