கோதண்டராமர் கோவில் தேர்பழுது பார்ப்பு பணி 'விறுவிறு'

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேர் பழுது பார்க்கும் பணி நடக்கிறது.மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்றது, ஏரி காத்த ராமர் எனும் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாத, மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைபிடித்தவாறு திருமணக்கோலத் தில்
கோதண்டராமர் கோவில் தேர்பழுது பார்ப்பு பணி 'விறுவிறு'

மதுராந்தகம்:மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேர் பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்றது, ஏரி காத்த ராமர் எனும் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாத, மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைபிடித்தவாறு திருமணக்கோலத் தில் அமைந்திருப்பது சிறப்பு.
இக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை என, இரு வேளைகளிலும், பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி வீதியுலா வருவார். விழாவின் மூன்றாம் நாளில் கருட சேவை, ஏழாம் நாளில் வெள்ளித் தேரில் ராமபிரான் வீதி உலா வருகிறார்.வரும் 13ல் பெரிய தேரோட்டம் நடக்கிறது.

இதையொட்டி, தேர் பழுது பார்க்கும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. இயல்பு நிலை காரணமாக, இந்தாண்டு சிறப்பு முறையில் திருவிழா நடத்த, கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X