தாளவாடியில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தாளவாடியில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் ஆசனுாரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சிறுத்தையை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை மாட்டியது. தகவல் கிடைத்ததும் தாளவாடி பகுதியை சேர்ந்த நிருபர்கள் கணேசன்,முருகானந்தம், செய்திக்காக வீடீயோ மற்றும் போட்டோ எடுத்தனர்.
 தாளவாடியில்  வனத்துறை அதிகாரிகளை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தாளவாடியில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் ஆசனுாரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சிறுத்தையை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை மாட்டியது.
தகவல் கிடைத்ததும் தாளவாடி பகுதியை சேர்ந்த நிருபர்கள் கணேசன்,முருகானந்தம், செய்திக்காக வீடீயோ மற்றும் போட்டோ எடுத்தனர். அங்கு இவர்கள் இருவரும் மட்டுமின்றி வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் போட்டோ, வீடீயோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். ஆனால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நிருபர்களிடம், அத்து மீறி ஆசனுார் கோட்ட அதிகாரி தேவேந்திரகுமார் மீனா திடீரென நிருபர் முருகானந்தத்தின் கழுத்தில் கை வைத்தும், சர்ட் காலரை பிடித்து இழுத்தும் மிக கேவலமாக நடத்தி உள்ளார்.
மேலும், வனக்காப்பாளர் முகிலன் என்பவர் கணேஷின் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கையில் இருந்து பறித்து கீழே போட்டு உடைத்துள்ளார். இது குறித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது அப்படித்தான் செய்வோம் என்று பதில் கூறினர். வனத்துறையினரின் இச்செயலை கண்டித்து சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி தாலூக்கா பத்திரிக்கையாளர்கள் சார்பாக இன்று ஆசனூர் வனக்கோட்ட அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஆசனுார் வனக்கோட்டஅதிகாரி தேவேந்திரகுமார்மீனா விடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செல்போனை உடைத்து சேதப்படுத்திய முகிலன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், வனக்காப்பாளர் முகிலன் புதிய செல்போன் வாங்கித்தர உறுதி அளித்தார். மேலும், தேவேந்திரகுமார் மீனா மீதான புகாரை, உயரதிகாரிகளுக்கு அனுப்புவதாக பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஜூலை-202207:29:49 IST Report Abuse
Bhaskaran ஒரு நடிகை தன கணவரை இழந்த துக்கத்தில் இருக்கும்போது அதை வீடியோ எடுத்து காசு பார்க்கும் ஊடகங்கள்
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
02-ஜூலை-202200:04:37 IST Report Abuse
Manguni சஸ்பெண்ட் இட மாற்றம் எல்லாம் ஒரு தண்டனையா? டிஸ்மிஸ் செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X