செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் தவிப்பு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
செய்யூர்:செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில், குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் தாகத்தில் தவிக்கின்றனர்.செய்யூர் - சித்தாமூர் செல்லும் சாலையில், செய்யூர் தாசில்தார் அலுவலகம் உள்ளது. குடும்ப அட்டை, சொத்து மதிப்பு சான்று, நில அளவைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைக்காக தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்.இங்கு 'இ - சேவை' மையத்திற்கு ஆதார் அட்டை எடுத்தல்,
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் தவிப்பு

செய்யூர்:செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில், குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் தாகத்தில் தவிக்கின்றனர்.
செய்யூர் - சித்தாமூர் செல்லும் சாலையில், செய்யூர் தாசில்தார் அலுவலகம் உள்ளது. குடும்ப அட்டை, சொத்து மதிப்பு சான்று, நில அளவைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைக்காக தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்.இங்கு 'இ - சேவை' மையத்திற்கு ஆதார் அட்டை எடுத்தல், திருத்தம் மேற்கொள்ளவும் பலர் வருகின்றனர்.
இந்த அலுவலக பகுதியில் தேநீர், குளிர்பானக் கடை எதுவும் இல்லாததால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அலுவலக வளாகத்தில் 2020ல் அரசு சார்பில் ஆவின் பாலகம் கட்டப்பட்டது.இந்த ஆவின் பாலகம் கட்டப்பட்டதில் இருந்து இன்று வரை திறக்கப்படாமல், வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.
குறிப்பாக, தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் சான்று பெற வரும் முதியோர், மாணவ - மாணவியர், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், குடிநீருக்காக தவியாய் தவிக்கின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள், ஆவின் பாலகத்தை திறந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X