வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எப்.ஏ.டி.எப்., அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜா குமார் உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்காக எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர், பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை, கறுப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என, இரு வகைகளாக பிரிக்கிறது.
![]()
|
இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜெர்மனியின் மார்க்ஸ் பிளியர் ஒய்வு பெற்றதையடுத்து சிங்கப்பூரை சேர்ந்த டி. ராஜா குமார் கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் எப்.ஏ.டி.எப். தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று பொறுப்பேற்றார். இவர் 2024ம் ஆண்டுவரை இப்பதவியில் இருப்பார். எப்.ஏ.டி.எப். துணை தலைவராக மெக்சிகோவை சேர்ந்த எலிசா டி. ஆன்டா மெட்ராஸோ என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜா குமார் , உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தருவார். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.