தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 2,385 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை1 ம் தேதி) ஒரே நாளில் 2,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 1 ) 32,960 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,025; செங்கல்பட்டு 369; திருவள்ளூர் 121, கோவை 118; காஞ்சிபுரம் 84; திருச்சி 67 ; கன்னியாகுமரி 72;

சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை1 ம் தேதி) ஒரே நாளில் 2,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 1 ) 32,960 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,025; செங்கல்பட்டு 369; திருவள்ளூர் 121, கோவை 118; காஞ்சிபுரம் 84; திருச்சி 67 ; கன்னியாகுமரி 72; திருநெல்வேலி 64 ; மதுரை 49; தூத்துக்குடி 54, விருதுநகர் 39; சேலம் 33; ராணிப்பேட்டை 29; ஈரோடு 26 ; விழுப்புரம் 22; சிவகங்கை, திருப்பூர் 20; கிருஷ்ணகிரி 17; நாமக்கல்15 ; பெரம்பலுார் 14; கடலுார் 13; திருவண்ணாமலை, வேலுார் 12; திண்டுக்கல் 11;புதுக்கோட்டை, கடலூர் 9; தஞ்சாவூர், திருவாரூர் 8 ; தென்காசி, தேனி 6 ; நாகப்பட்டினம், திருப்பத்துார் 5; அரியலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை 4;ராமநாதபுரம், தர்மபுரி,கரூர், 3;என மொத்தம் 2,385 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,77,570 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,27,386 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.


latest tamil news



சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 30 ம் தேதி) 909 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 1ம் தேதி)சென்னையில் 1,025ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,158 ஆக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X