போடி, : போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் கோகிலா ஸ்ரீ, மோகனப்பிரியா, தர்ஷினி, அனிதா ஆகிய மாணவிகள் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கத் தொகை பெறுவார்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜன், ஒருங்கிணைப்பாளர் காளியப்பன், எய்ம்ஸ் ஆப் இந்தியா அறக்கட்டளை இயக்குனர் தினேஷ் குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.