கங்கையில் டைவ்: 73. வயது மூதாட்டி சாகசம்| Dinamalar

கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்

Added : ஜூலை 02, 2022 | |
புதுடில்லி :உத்தரகண்ட் கங்கை நதியில் 40 அடி உயர பாலத்தில் இருந்து மூதாட்டி 'டைவ்' அடிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஹரியானாவின் பந்தேபூர் கிராமத்தில் வசிக்கும் ஓம்வதி,73. சமீபத்தில் உத்தரகண்டின் ஹரித்துவாருக்கு குடும்பத்தினருடன் வந்தார். கங்கை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார். ஆற்றின் குறுக்கே 40 அடி
 கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்

புதுடில்லி :உத்தரகண்ட் கங்கை நதியில் 40 அடி உயர பாலத்தில் இருந்து மூதாட்டி 'டைவ்' அடிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஹரியானாவின் பந்தேபூர் கிராமத்தில் வசிக்கும் ஓம்வதி,73. சமீபத்தில் உத்தரகண்டின் ஹரித்துவாருக்கு குடும்பத்தினருடன் வந்தார்.
கங்கை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார். ஆற்றின் குறுக்கே 40 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தில் இருந்து நதியில் 'டைவ்' அடித்து நீந்தி கரை சேர்ந்தார்.
இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வேகமாக பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த ஏராளமானோர் ஓம்வதிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஓம்வதி கூறுகையில், “நான் சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன். கங்கையில் பல முறை நீந்தியிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே நீச்சல் அடிப்பதால்தான் இந்த வயதிலும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்,” என்றார்.
இதேபோல், ஓம்வதி உற்சாகமாக டான்ஸ் ஆடும் வீடியோவும் சமூக வலைதளத்தில் ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X