மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
புதுச்சேரி;கொடுக்கூரில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கண்டமங்கலம் ஒன்றிய கொடுக்கூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.இந்நிலையில்,

புதுச்சேரி;கொடுக்கூரில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கண்டமங்கலம் ஒன்றிய கொடுக்கூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.இந்நிலையில், இப்பள்ளியின் மூன்று கட்டடங்களும் சேதமடைந்ததால், முதல்கட்டமாக ஒரு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதுவரையில் புதிய வகுப்பறை கட்டப்படவில்லை. இதற்கிடையே, சேதமடைந்த மற்ற கட்டடங்களின் மேற்கூரைகளும் உடைந்து விழுந்து வருகின்றன.இதனால், பள்ளி வளாகத்தில் மரத்தடி நிழலில் மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். அசம்பாவிதம் நடப்பதற்கு முன், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X