மேம்பாலம் கட்ட தோண்டிய குழியில் 'புதையல்!' ஓட்டல் உரிமையாளரை ஏமாற்றிய ம.பி., கும்பல்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவை;'உக்கடம் மேம்பாலம் கட்ட குழி தோண்டியபோது கிடைத்த தங்கப்புதையல்' என்று கூறி, திருப்பூர் ஓட்டல் உரிமையாளரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த ம.பி., கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் பாலு, 45; ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜூன் 15ம் தேதி இவரது ஓட்டலுக்கு சாப்பிட வந்த ரோகித் என்பவர், தான் ம.பி., மாநிலம் போபாலை சேர்ந்தவர் என்றும், கோவையில் உக்கடம்

கோவை;'உக்கடம் மேம்பாலம் கட்ட குழி தோண்டியபோது கிடைத்த தங்கப்புதையல்' என்று கூறி, திருப்பூர் ஓட்டல் உரிமையாளரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த ம.பி., கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் பாலு, 45; ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜூன் 15ம் தேதி இவரது ஓட்டலுக்கு சாப்பிட வந்த ரோகித் என்பவர், தான் ம.பி., மாநிலம் போபாலை சேர்ந்தவர் என்றும், கோவையில் உக்கடம் மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிமுகம் செய்துக் கொண்டார்.மேம்பாலம் கட்ட குழி தோண்டியபோது, பானையில் தங்கப்புதையல் கிடைத்ததாகவும், அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.
தங்கம் முழுவதையும் வாங்க ஆசைப்பட்ட பாலு, விலையை பற்றி விசாரித்தார். அதற்கு ரோகித், 'பணத்துடன் கோவை வந்தால் வாங்கிக் கொள்ளலாம்' என்றார்.அதன்படி ஜூன் 20ல் பாலுவும், அவரது மனைவியும், காரில் கோவை காந்திபுரம் வந்தனர். ரோகித், கிரண் குமார் மற்றும் மூதாட்டி ஒருவர் சேர்ந்து, ஒரு பானையில் இருந்த தங்க நகையை கொடுத்தனர். அந்த நகைகள், ஐந்தடி நீளம் கொண்ட சங்கிலியாக இருந்தன.பாலுவும், அவரது மனைவியும், நகையை வாங்கிக்கொண்டு ரோகித் தரப்பினர் கேட்ட 5 லட்சம் ரூபாயை கொடுத்தனர். மறுநாள் மதிப்பீட்டாளர் ஒருவர் நகையை பரிசோதித்தபோது, பித்தளை என தெரியவந்தது.போலியான நகையை கொடுத்து தங்களை ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சியடைந்த பாலு, கோவை காட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிந்த எஸ்.ஐ., ராஜேந்திரன், மோசடி செய்த மூவரையும் தேடி வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X