ஓராண்டுக்கு முன் தடுப்பூசி:நோய் எதிர்ப்பு திறன் குறைவு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை;''கொரோனா தடுப்பூசி போட்டு, ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 5,000 வரை தினசரி கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில், 2,000 எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. ஒமைக்ரான் பிஏ4,

சென்னை;''கொரோனா தடுப்பூசி போட்டு, ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 5,000 வரை தினசரி கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில், 2,000 எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.
ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, '10க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்' என, முதல்வர் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் வரை மக்களிடையே, 88 சதவீதமாக நோய் எதிர்ப்பு திறன் இருந்தது. கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு கடந்தவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைகிறது. இதனால், தடுப்பூசி போட்டு ஓராண்டை கடந்தவர்கள், பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 கொரோனா தாக்குகிறது. எனவே, அலட்சியமாக இருக்காமல், யாருக்காவது தொற்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையின்றி, வெளியே இருந்து மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X