மத்திய அரசு ஊழியர்கள் 8089 பேருக்கு பதவி உயர்வு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி-மத்திய அரசுப்பணியில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகளை சேர்ந்த 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய செயலக நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மத்திய செயலக சேவை, மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகிய பிரிவுகள் உள்ளன.இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, மத்திய பணியாளர் மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-மத்திய அரசுப்பணியில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகளை சேர்ந்த 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



மத்திய செயலக நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மத்திய செயலக சேவை, மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகிய பிரிவுகள் உள்ளன.இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களுக்குரிய பதவி உயர்வைப் பெறாமல் ஓய்வு பெற்றுவிடுவது வருத்தம் அளிக்கிறது. எனவே, மத்திய அரசின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


மத்திய அரசு உத்தரவுப்படி, மத்திய செயலக சேவைப் பிரிவில், 4,734 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மத்திய செயலக சுருக்கெழுத்தர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகியவற்றில் முறையே, 2,966 பேர், 389 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
02-ஜூலை-202210:35:50 IST Report Abuse
R.RAMACHANDRAN ஒரு வேலையையும் உருப்படியாக செய்யாமல் இருக்கையை தேய்த்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு ஒரு கேடு.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
02-ஜூலை-202208:27:39 IST Report Abuse
Rajarajan சொன்னா கேட்டியா ?? இப்போ புரிஞ்சிகிட்டியா ?? இப்போ தெரிஞ்சிகிட்டியா ?? ஏன் அடிக்கடி GST வரிய உயர்தராங்கனு. இப்போவே பயங்கரமா இருக்கு. அடுத்த சம்பள கமிஷன் வந்தா, இன்னும் பயங்கரமா இருக்கும். இப்போவே கொஞ்சம் கொஞ்சமா உயர்த்தினா தான், சுமை மொத்தமா வெளியே தெரியாது. இதெல்லாம் தொழில் நேக்குமா.
Rate this:
Cancel
02-ஜூலை-202207:18:49 IST Report Abuse
அப்புசாமி இவிங்களுக்கெல்லாம் அகவிலைப்படி, மொளகுப் பொடி எல்லாம் குடுத்து இப்போ ப்ரமோஷனும் குடுத்துருவாங்க. எப்பிடி விலைவாசி இவிங்களை பாதிக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X