மணிப்பூர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது; 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன் தினம் பெய்த கனமழையால், பணி நடக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது; 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது.



latest tamil news



இங்கு நேற்று முன் தினம் பெய்த கனமழையால், பணி நடக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் சிக்கி இறந்த ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்களின் 20 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.மேலும் 55 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. நேற்று வரை 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை, அசாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றுடன் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enna secular desam idhu - secular???,ஐஸ்லாந்து
02-ஜூலை-202206:35:54 IST Report Abuse
enna secular desam idhu நெஞ்சு பதறுகிறது எனது இந்திய முதுகெலும்பு ராணுவத்திற்கு இப்படி ஒரு சோதனையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X