வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்-கேரளாவை சேர்ந்த இளம்பெண், நியூசிலாந்து நாட்டில் போலீஸ் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
![]()
|
கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் செபாஸ்டியனின் மகள் அலீனா, ஆறாம் வகுப்பு வரை கேரளாவில் படித்தார்.அப்போது, அவரது தந்தைக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து, அவர் குடும்பத்துடன் அங்கு சென்று விட, அலீனா ஏழாம் வகுப்பில் இருந்து நியூசிலாந்தில் படித்தார்.
அங்கு, ஒடாகோ பல்கலையில் 'சைக்காலஜி' மற்றும் 'கிரிமினாலஜி' பாடங்களில் பட்டம் பெற்ற பின், ராயல் நியூசிலாந்து போலீஸ் பயிற்சி கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றார். அடுத்து, போலீஸ் பணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார்.
![]()
|
இந்நிலையில், அலீனா, ஆக்லாந்து நகரில் கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து போலீஸ் பணியில் சேரும் கேரளாவின் முதல் பெண் அலீனாவுக்கு, கேரள மக்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement