இது உங்கள் இடம்: வானதியின் கேள்விக்கு பதில் என்ன?

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:எம்.குணசேகர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குஜராத்தில், 2002ல், கரசேவகர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில், ராம பக்தர்கள், 59 பேர் உடல் கருகி பலியாகினர். இதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் மூண்டது. அப்போது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கலவரத்தை மூன்றே
Vanathi Srinivasan, Vanathi, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


எம்.குணசேகர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குஜராத்தில், 2002ல், கரசேவகர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில், ராம பக்தர்கள், 59 பேர் உடல் கருகி பலியாகினர். இதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் மூண்டது. அப்போது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கலவரத்தை மூன்றே நாட்களில் கட்டுக்குள் கொண்டு வந்தது; அதன்பின், 20 ஆண்டுகளாக, அம்மாநிலத்தில் எந்த ஒரு கலவரமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

குஜராத்தில் நடந்த கலவரத்துக்கும், மோடிக்கும் கிஞ்சிற்றும் தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஆனாலும், குஜராத் கலவரத்திற்கு காரணகர்த்தாவே மோடி தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மோடியை அரசியலில் இருந்து அகற்ற, மத்தியில் முன்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, 2004 முதல் 2014 வரை பகீரத பிரயத்தனம் செய்தது; இருந்தும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

அதற்கு மாறாக, மூக்குடைபட்டு, தற்போது இருக்கிறதா, இறந்து விட்டதா என்று கேட்கும் அளவுக்கு, மூலையில் முடங்கிக் கிடக்கிறது. 'காங்கிரஸ் தன் பழைய செல்வாக்கை இழந்து விட்டது; அது, தன் இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 'எனவே, அக்கட்சிக்கு ஓட்டளித்து, மக்கள் தங்கள் ஓட்டை வீணாக்கக் கூடாது' என்று ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலாய்த்து, கடித்து துப்பி இருக்கிறார்.


latest tamil news'காங்கிரஸ் கட்சியின் துாண்டுதலால், குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தை, மூன்றே நாட்களில் அடக்கிய மோடியையே, கலவரத்துக்கு காரணமானவர் என்று, மனசாட்சியை மறைத்து வைத்து குற்றம் சாட்டுபவர்கள், 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த கலவரம், கடையடைப்பு, சூறையாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, அப்போது, தமிழக முதல்வராக கோலோச்சி கொலுவிருந்த கருணாநிதி தான் காரணம் என்று ஏன் சொல்லவில்லை?' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கலவரங்கள் எங்கு, எப்போது நடந்தாலும், அதனுடன் மதத்தை தொடர்புபடுத்தி, அந்த கலவரத்துக்கு காரணமே பா.ஜ., தான் என்று, நாகூசாமல் குற்றஞ்சாட்டி குளிர் காய்பவர்கள், வானதியின் இந்த கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்... அந்த பதிலை எப்போது வெளியே சொல்லப் போகின்றனர்?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
03-ஜூலை-202203:29:33 IST Report Abuse
T.sthivinayagam ஹிந்தி சமஸ்கிருதம் பேசுபவர்கள் i love bjp என்று ஆங்கிலத்தில் கட் அவுட் வைக்கிறார்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
02-ஜூலை-202219:36:21 IST Report Abuse
bal நம்மவருக்கு குவாட்டர் பிரியாணி மற்றும் துட்டு கொடுக்கும் பழக்கம் மட்டும்தான் உண்டு...மற்ற கலவரம் கடவுள் நிந்தனை எல்லாம் தானாக நடப்பது..பின் விளைவு.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
02-ஜூலை-202217:39:30 IST Report Abuse
Suri உங்கள் அலுவலகம் லாபம் என்று எழுதி திறந்தீர்களே?? அங்கு எப்படி இருக்கு பிழைப்பு?? லாபகரமான இருக்கா???
Rate this:
Soumya - Trichy,இந்தியா
02-ஜூலை-202219:11:35 IST Report Abuse
Soumyaகொத்தடிமைக்கு ஓசிகோட்டர் தானே முக்கியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X