தவறான தகவல்களை பரப்பாதீர்கள்: நடிகை மீனா

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-'என் கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்' என, நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடிகை மீனா - வித்யாசாகர் திருமணம், 2009ல் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சென்னை, சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், ௪௮, சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை
 தவறான தகவல்களை பரப்பாதீர்கள்: நடிகை மீனா

சென்னை-'என் கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்' என, நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை மீனா - வித்யாசாகர் திருமணம், 2009ல் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சென்னை, சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், ௪௮, சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக, தகவல்கள் வெளியாகின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மீனா வெளியிட்ட அறிக்கை:என் கணவரின் இறப்பால், நான் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். பத்திரிகையாளர்கள், இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்த கடினமான சூழலில், என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றி.இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-ஜூலை-202211:35:03 IST Report Abuse
Barakat Ali சுயமாக சம்பாதிக்கும் அளவுக்கு மகளுக்கு வயசு பத்தாது ........ உங்களுக்கோ சம்பாதிக்கும் வயது கடந்துவிட்டது ..... ரொம்ப கஷ்டம்தான் .....
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
02-ஜூலை-202206:37:41 IST Report Abuse
Dharma பத்திரிக்கையாளர்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. காரணம் R S B Media.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X