35 வயதை கடந்த 63 சதவீத பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை-''தமிழகத்தில் 35 வயதை கடந்த, 63 சதவீத பெண்களுக்கு, ஏதேனும் ஒரு வகையில் சிறுநீரக பாதிப்பு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், மூன்று நாள் மகளிர் சிறப்பு சிறுநீரியல் சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது. இந்திய மகளிர் சிறப்பு சிறுநீரியல் சங்கம் மற்றும் அரசு மகப்பேறு
 35 வயதை கடந்த 63 சதவீத பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை-''தமிழகத்தில் 35 வயதை கடந்த, 63 சதவீத பெண்களுக்கு, ஏதேனும் ஒரு வகையில் சிறுநீரக பாதிப்பு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், மூன்று நாள் மகளிர் சிறப்பு சிறுநீரியல் சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது. இந்திய மகளிர் சிறப்பு சிறுநீரியல் சங்கம் மற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாநாட்டை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்த மாநாட்டில், 300 டாக்டர்கள் நேரடியாகவும், 700 டாக்டர்கள் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும் பங்கேற்கின்றனர். 30க்கும் மேற்பட்ட சர்வதேச வல்லுனர்கள், 60க்கும் மேற்பட்ட இந்திய சிறப்பு டாக்டர்கள் சொற்பொழிவு ஆற்ற உள்ளனர்.

மேலும் கர்ப்பப்பை, நீர்ப்பை, மலப்பை இறங்கி போனதற்கும், பிரசவத்தின்போது ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 35 வயதை கடந்த பெண்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு ஏதேனும் ஒருவித சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி, 63 சதவீத பெண்களுக்கு சிறுநீரக சம்பந்தமான பிரச்னை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார், சுகாதார திட்ட இயக்குனர் உமா, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, ராஜிவ் காந்தி அரசு மருத்துமவனை முதல்வர் தேரணி ராஜன், சிறுநீரியல் துறை நிபுணர் ராஜ மகேஷ்வரி, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
02-ஜூலை-202210:28:03 IST Report Abuse
Radhakrishnan Seetharaman இந்த ஆராய்ச்சி கருத்துக்களையெல்லாம் தூர வைத்துவிட்டு தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுக்கள் கொண்டு வரும் வழியைப் பாருங்கள் அமைச்சரே
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202208:35:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சரக்கு காரணமா ???? அல்லது சரக்குக்குப் பிறகு உள்ளே தள்ளும் இறைச்சி காரணமா ????
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-202206:04:31 IST Report Abuse
Mani . V மது குடித்தா சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமா மிஸ்டர். சுப்ரமணியன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X