காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலுார் : ''காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும்'' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.வேலுார் மாவட்டம் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் நாராயணி பீடம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடக்கிறது. பெண் துறவியர் பங்கேற்ற சக்தி மாநாடு நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Governor,Tamilisai Soundararajan, Tamilisai, ஆளுநர்,கவர்னர்,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார் : ''காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும்'' என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

வேலுார் மாவட்டம் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் நாராயணி பீடம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடக்கிறது. பெண் துறவியர் பங்கேற்ற சக்தி மாநாடு நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாதனைகள் செய்த பெண் துறவிகளுக்கு சான்றிதழ் விருது வழங்கி பேசியதாவது:

காவி தான் ஆன்மிகம்; ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும்.அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ் தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை.


latest tamil news



ஆன்மிகமும் காவியும் சேர்ந்தது தான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும் காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர்.பலம் பொருந்திய காவி துறவி பெண்களை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோயில் கூட மூடப்படவில்லை. வழிபாட்டுட்டுன் தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம்.

எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்; மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வார்; ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்வார். ஆனால் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்ல மாட்டார். ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
02-ஜூலை-202207:37:35 IST Report Abuse
Vaduvooraan அய்யய்யோ..இதென்ன உண்மையை ஒரே போடு போட்டு உடைச்சிட்டாங்க இந்த அம்மா இதோ டூல்கிட் படை உடனே திரண்டு வந்து விமரிசனம் செய்ய கிளம்பிடுமே? அறிவுஜீவிகள், முல்லாக்கள், அரசியலில் திளைத்துக் கொண்டு எப்பவாச்சும் மாதா கோயில் போகிற பாதிரிகள், வருமானம் எப்படி வருகிறது என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் யூடியூப்பில் ஒரு நாளைக்கு பத்து வீடியோ வெளியிடுகிற கருஞ்சட்டை செஞ்சட்டை சமூக ஆர்வலர்கள்..எல்லோரும் கழுவி ஊத்திருவாங்களே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X