காஞ்சிபுரம்-மாற்றுத்திறன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கைகாஞ்சிபுரம், ஓரிக்கை செவித்திறன் குறைபாடு உடையோர் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, முன் பருவ பள்ளி முதல், பத்தாம் வகுப்பு வரை இரு பாலரும் சேர்ந்து படிக்கலாம். அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாணவ - மாணவியர் தங்கி படிக்கும் விடுதி வசதி உள்ளது.இங்கு, காது கேளாத; வாய் பேச முடியாத மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், மாணவர்களின் தனித்திறன் மேம்படும் வகையில், கணினி கற்பித்தல், யோகா, கராத்தே, தியானம் உள்ளிட்ட பல வித பயிற்சி அளிக்கப்படுகிறது. சத்தான உணவு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை பொருட்கள் வழங்கப்படுகிறது. கல்வி உதவிதொகை; இலவச காது கேட்கும் கருவி, பாடப்புத்தம், நோட்டு, சீருடை, புத்தகப்பை, காலணிகள், பேருந்து இலவச பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறதுஎனவே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனுடைய மாணவ - மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், செவித்திறன் குறைபாடு அரசு உயர்நிலைப்பள்ளி சதாவரம் ஓரிக்கை அஞ்சல் காஞ்சிபுரம்- 2 எனும் முகவரியில் சென்று, தலைமை ஆசிரியை அணுகலாம். மேலும், 044 - -27267322, 95974 65717 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.