புகார் பெட்டி ..

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மோசமான சாலை சீரமைக்கப்படுமா? காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மீது சாலை சேதமடைந்து பல இடங்களில் பல்லாங்குழிகளாக மாறிஉள்ளது. இதில் சாலை இணைப்பில் விரிசல் ஏற்பட்டு இடைவெளி அதிகரித்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில்



மோசமான சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மீது சாலை சேதமடைந்து பல இடங்களில் பல்லாங்குழிகளாக மாறிஉள்ளது. இதில் சாலை இணைப்பில் விரிசல் ஏற்பட்டு இடைவெளி அதிகரித்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, செவிலிமேடு பாலத்தின் மீது சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-த.கண்ணன், காஞ்சிபுரம்.குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா?உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம்- அரும்புலியூர் சாலை வழியில், சீட்டணஞ்சேரி செல்லும் 2 கி.மீ., துாரம் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான், அரும்புலியூர் மற்றும் கரும்பாக்கம் விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களுக்கு, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இச்சாலை, மிகவும் குறுகிய அளவினதாக உள்ளதால், டிராக்டரில் வைக்கோல் ஏற்றி செல்ல இயலாமலும், அறுவடை இயந்திரங்களை இயக்கி செல்ல முடியாமலும் விவசாயிகள் திணறுகின்றனர். மேலும், இப்பகுதி முழுதும் விவசாயம் நிறைந்ததாக உள்ளது. இதனால், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் கரும்பு அறுவை இயந்திரம் என, விவசாய பணி சார்ந்த வாகனங்கள் இச்சாலை வழியாக இயக்க வேண்டி உள்ளது. இதனால், கரும்பாக்கம் மற்றும் அரும்புலியூர் காலனி வழியாக சீட்டணஞ்சேரி செல்லும் சாலையை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க.விஜயக்குமார், அரும்புலியூர்.ஒரு லிட்டர் பால் பாக்கெட் கிடைக்குமா?காஞ்சிபுரம் நகரில், பல இடங்களில் ஆவின் பாலகம் இயங்கி வருகிறது. இதில், ஒரு லிட்டர் பால் பாக்கெட் கேட்கும் நபர்களுக்கு, ஒரு லிட்டர் பால் பாக்கெட் இல்லை என, கூறுகின்றனர்.அதற்கு பதிலாக, இரண்டு அரைலிட்டர் பால் பாக்கெட்டை வாங்கி செல்லுங்கள் என, பால் விற்பனை செய்யும் நபர்கள் கூறுகின்றனர். இதனால், ஒரு ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டி உள்ளது. ஒரு நாளைக்கு, 100 லிட்டர் பாலுக்கு மேல் வாங்குவோருக்கு கூடுதல் பணம் செலவிட வேண்டி உள்ளது. எனவே, காஞ்சிபுரம் நகரில் ஒரு லிட்டர் பால் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.--நா. அசோக், காஞ்சிபுரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X