கணினி வழி கணக்கு பயிற்சி

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்,-காஞ்சிபுரம் இந்தியன் வங்கி பயிற்சி மைய இயக்குனர் லட்சுமணன் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளதாவது:இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மற்றும் இரு பாலருக்கான கணினி வழி தொழில் வியாபார கணக்கு கற்பித்தலுக்கான, 30 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 4ல் துவங்குகிறது.ஒரு மாதம் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமில்

காஞ்சிபுரம்,-காஞ்சிபுரம் இந்தியன் வங்கி பயிற்சி மைய இயக்குனர் லட்சுமணன் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளதாவது:இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மற்றும் இரு பாலருக்கான கணினி வழி தொழில் வியாபார கணக்கு கற்பித்தலுக்கான, 30 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 4ல் துவங்குகிறது.ஒரு மாதம் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு மதிய உணவுடன், பயிற்சிக்கான கையேடு, பயிற்சி உபகரணம், சான்றிதழ் என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.பெண்களுக்கான தையல் பயிற்சியில் சேர விரும்புவோர், குறைந்தபட்சம், 8ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்த, 18 முதல், 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.'டேலி' எனப்படும் கணினி வழி தொழில் வியாபார கணக்கு பயிற்சியில் சேர எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும். காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம், 044 - 2726 8037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X