குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்த இன்று முகாம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்,-ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், குடிநீர் இணைப்பு கட்டணம் வசூலிப்பதற்கு, இன்று ஊராட்சிதோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியத்தில் உள்ள 272 ஊராட்சிகளில், 1,350 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனி நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் வீதம்

காஞ்சிபுரம்,-ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், குடிநீர் இணைப்பு கட்டணம் வசூலிப்பதற்கு, இன்று ஊராட்சிதோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியத்தில் உள்ள 272 ஊராட்சிகளில், 1,350 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனி நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்குவது மற்றும் பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது நிறுவனங்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்படுகிறது.மத்திய அரசு, 45 சதவீதம்; மாநில அரசு, 45 சதவீதம்; பொது மக்களின் பங்களிப்பு, 10 சதவீதம் என, 100 சதவீதத்தில் இத்திட்டம் செலுத்தப்படுகிறது.கடந்த, 2020- - 21 நிதி ஆண்டில், 1 லட்சத்து 16 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 223 மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள், 458 ஆழ்துளை கிணறுகள், 49 திறந்தவெளி கிணறுகள், 104 பம்ப் ரூம்கள், 897.76 கி.மீ குடிநீர் பைப் லைன் ஆகிய பணிகள் செய்யப்பட்டு உள்ளனஇதில், பொது மக்களின் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். பெரும்பாலானோர் செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. இதை வசூல் செய்வதற்கு, ஊராட்சிகள் தோறும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; அனைத்து ஊராட்சி ஒன்றிய களப்பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X