ரேஷன் கடை இல்லாததால் விபத்தை சந்திக்கும் மக்கள்; கலெக்டர் பரிந்துரை காற்றில் பறந்தது

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மேலுார் : து.அம்பலகாரன்பட்டியில் கலெக்டர் பரிந்துரைத்து நான்கு வருடங்களாகியும் பகுதி நேர ரேஷன் கடை துவங்காததால் பொருட்கள் வாங்க செல்வோர் நான்கு வழிச்சாலையில் விபத்துக்குஉள்ளாகின்றனர்.தும்பைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் 1100 பேர் பயனாளிகளாக உள்ளனர். தும்பைபட்டியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் ரேஷன் கடையும், எதிர்புறத்தில்



மேலுார் : து.அம்பலகாரன்பட்டியில் கலெக்டர் பரிந்துரைத்து நான்கு வருடங்களாகியும் பகுதி நேர ரேஷன் கடை துவங்காததால் பொருட்கள் வாங்க செல்வோர் நான்கு வழிச்சாலையில் விபத்துக்குஉள்ளாகின்றனர்.தும்பைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் 1100 பேர் பயனாளிகளாக உள்ளனர். தும்பைபட்டியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் ரேஷன் கடையும், எதிர்புறத்தில் து.அம்பலகாரன்பட்டி கிராமமும் உள்ளது. பொது மக்கள் நீண்ட துாரம் அலைய வேண்டியதிருப்பதால் பகுதி நேர ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

சமூக ஆர்வலர் ராஜேஸ்வரன் கூறியதாவது: 2018ல் கலெக்டர் வீரராகவராவ் பரிந்துரைத்த பின், அதிகாரிகள் து.அம்பலகாரன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை துவங்க இடத்தை நேரில் ஆய்வு செய்தும் பலனில்லை. ரேஷன் பொருட்களுக்காக நான்கு வழிச்சாலையை கடப்பதால் விபத்துக்குள்ளாகிறோம். உடனே பகுதி நேர கடை துவங்க வேண்டும், என்றார்.மாவட்ட விநியோக அலுவலர் முருகேசன் கூறுகையில், ''கலெக்டர் பரிந்துரைத்த ஆவணங்களை தேடிவருகிறோம். டி.எஸ்.ஓ., வை அனுப்பி ஆய்வு செய்யப்படும்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X