பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்,--ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, சுவர்களில் வாசகம் எழுதி விழிப்புணர்வு செய்யும் பணிகள் துவங்கிஉள்ளன.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வகையில்,



ஸ்ரீபெரும்புதுார்,--ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, சுவர்களில் வாசகம் எழுதி விழிப்புணர்வு செய்யும் பணிகள் துவங்கிஉள்ளன.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள அரசு கட்டடம், தனியார் கட்டடத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பாதற்கான வாசகங்கள் எழுதி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.இதில், குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தலைமுறைக்கு நிரந்தர கேடு, மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் உள்ளிட்ட 16 வாசகங்கள் சுவர்களில் எழுதும் பணிகள் துவங்கின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X