'அம்மா' உணவகம் அருகே தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு ; பெரியகுளம் நகராட்சி 19வது வார்டு அவலம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 19 வது வார்டில் உள்ள மார்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல், குப்பை அகற்றுவதில் தாமதம், அம்மா உணவகத்தின் அருகே கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றத்துடன் உணவருந்தும் அவலம் இந்த வார்டில் மார்க்கெட் தெரு, சுதந்திர வீதி, காட்டாமேட்டு 1வது தெரு பகுதிகளில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. நகரின் முக்கியத்துவமான பஜார்வீதியும் இந்த
'அம்மா' உணவகம் அருகே தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு ;  பெரியகுளம் நகராட்சி 19வது வார்டு அவலம்


பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 19 வது வார்டில் உள்ள மார்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல், குப்பை அகற்றுவதில் தாமதம், அம்மா உணவகத்தின் அருகே கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றத்துடன் உணவருந்தும் அவலம் இந்த வார்டில் மார்க்கெட் தெரு, சுதந்திர வீதி, காட்டாமேட்டு 1வது தெரு பகுதிகளில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. நகரின் முக்கியத்துவமான பஜார்வீதியும் இந்த வார்டில் அடங்கியுள்ளது.

பெரியகுளம் மூன்றாந்தல் பஜார் வீதி முதல் மாரியம்மன் கோவில் வரை ரோட்டில் இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் வசதியுடன் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கவுமாரியம்மன் கோவில் ஆனித்திருவிழா ஜூலை 5ல் சாட்டுதலும், ஜூலை 11ல் திருவிழா துவங்குகிறது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்துச் செல்லும் முக்கிய ரோடாக பஜார் ரோடு உள்ளது. ஆனால் ரோடு பணி இன்னும் முடியாமல் அரைகுறையாக உள்ளது. இங்குள்ள மார்க்கெட் வீதியில் மாடுகள் உலாவருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். பஜார் வீதியிலிருந்து மார்க்கெட் நுழையும் இடத்தில் மார்கெட் வியாபாரிகள் இரவில் கழிவுகளை கொட்டுவதால் குப்பை மலைபோல் தேங்கி காலையில் துர்நாற்றமும் சேறும் சகதியுமாக இருக்கும். காலை 8:00 மணிக்கு மேல் குப்பையை நகராட்சி அகற்றுகிறது. அதுவரை மார்கெட் வரும் பொதுமக்கள் குப்பை மீதுதான் நடந்து செல்கின்றனர். வார்டு மக்கள் கருத்து:



போக்குவரத்து நெரிசல்
ஏ.ரகுமான்: சுதந்திர வீதியில் காலை 7:45 மணி முதல் காலை 9:00 மணி வரை, டி.கள்ளிப்பட்டி, லட்சுமிபுரம், தேனி பகுதிகளுக்கு செல்லும் பள்ளி பஸ்கள் அதிகளவு வருகின்றன. மார்கெட் வருவோர் டூவீலர்களையும், சரக்கு இறக்கும் வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்துகின்றனர். இதனால் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் சுழற்சிமுறையில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி போக்குவரத்து சீரமைக்க வேண்டும். அம்மா உணவகம் பின்புறம் பாதாள சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ளதால் 50 மீட்டர் தூரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்கள் பலரும் மூக்கை மூடிக்கொண்டு சாப்பிடும் அவலநிலை உள்ளது. சுதந்திர வீதியின் அனுமதியில்லாத மீன் கடைகளால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்
பி.ரவிசங்கர்: மூன்றாந்தல் பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு செல்லும் இணைப்புத் தெருக்களான சுப்பையா தெருவில் நடுவீதியில் லாரியை நிறுத்தி கொண்டு பழைய பொருட்களை ஏற்றுக்கின்றனர். இதனால் டூவீலர்கள் அந்தப் பகுதியில் செல்ல முடியவில்லை. மார்க்கெட்டிற்குள் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் வெகு தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். சுகாதார வளாகத்திற்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X