கொரோனா உயிரிழப்பு மறைப்பு? தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், அதனால் உயிரிழப்பு இல்லை எனக் கூறிவரும் அரசு, கொரோனா வார்டில் உயிரிழப்போரை, 'நிமோனியா' போன்ற காய்ச்சலால் இறப்பு என, அரசு கணக்கு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையை சேர்ந்த 87 வயது மூதாட்டிக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., - 'சிடி ஸ்கேன்' ஆகியவற்றில் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி
Covid Dead, Corona Dead, TN fights Corona, Corona Virus, Covid 19

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், அதனால் உயிரிழப்பு இல்லை எனக் கூறிவரும் அரசு, கொரோனா வார்டில் உயிரிழப்போரை, 'நிமோனியா' போன்ற காய்ச்சலால் இறப்பு என, அரசு கணக்கு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்த 87 வயது மூதாட்டிக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., - 'சிடி ஸ்கேன்' ஆகியவற்றில் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி 23ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு கொரோனா பட்டியலில், இதுவரை காட்டப்படாமல் உள்ளது. அதேநேரம், அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்ததால், கொரோனா இறப்பு எனக் காட்டாமல், நிமோனியா காய்ச்சலால் இறப்பு என, அரசு கணக்கு காட்டியுள்ளது.


latest tamil news


மாநிலம் முழுதும் 450க்கும் மேற்பட்டோர் கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் ஒருசிலர் உயிரிழந்தால், அவர்கள் மாரடைப்பு, சிறுநீரக பிரச்னை, நிமோனியா போன்றவற்றை காரணம் காட்டி, கொரோனா உயிரிழப்பை பூஜ்ஜிய நிலையில் அரசு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு காய்ச்சல், கொரோனா போன்றவற்றால் பாதிக்கப்படுவோர், சிகிச்சையின்போது, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவர்கள் இறக்கும்போது, எந்த வகையில் பாதிக்கப்பட்டு இருந்தாரோ, அவை தான், இறப்புக்கான காரணமாக எடுத்து கொள்ள முடியும்.

உதாரணமாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கு பின், அவருக்கு கொரோனா இல்லாமல், வேறுவகை பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே, கொரோனா உயிரிழப்பை அரசு மறைக்கவில்லை. வெளிப்படையாகவே, தினசரி பாதிப்பை வெளியிட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
02-ஜூலை-202216:18:16 IST Report Abuse
madhavan rajan பல டெண்டர் ஊழல்களையே மறைத்து அமைச்சர்கள் வீராப்பு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதென்ன பெரிய விஷயம்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
02-ஜூலை-202216:09:02 IST Report Abuse
madhavan rajan அதுபோல குணமாந்தவர்களைக்கூட கொரோனா என்று கூறி முகத்தைக்கூட பார்ர்க்கவிடாமல் பல அரசு மறுத்தவமனைகள் செயல்பட்டன முதல் தொற்றில். அதே சமயம் VIP க்களுக்கு கொரோனாவிலிருந்து குணமானார் என்ற அறிவிப்பே இருக்காது. இறந்தவுடன் அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்று மாற்றிச் சொல்வார்கள். உதாரணம் வசந்த குமார் எம் பி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள். இறப்பு நேரம்வரை அவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தார் என்று அறிவிப்பே இல்லை. அரசாங்க அறிவிப்பு என்பதே நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்பது உண்மை.
Rate this:
Cancel
02-ஜூலை-202215:49:25 IST Report Abuse
அப்புசாமி ரெண்டு சைடுமே திருட்டுக கும்பல். எவன் எப்பிடி செத்தாலும் கொரோனாவில் செத்தான்னு சர்டிபிகேட் வாங்கினா அரசு உதவிப் பணம் கிடைக்குமுனு ஒரு கும்பல். எவன் கொரோனாவுல செத்தாலும் வேற வியாதிலதான் செத்தான்னு சொல்லி கொரோனாவை நல்லா கட்டுப் படுத்திட்டோம்னு சொல்ற அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X